Monday, 26 May 2014

இந்த வலி மறையாதா – ஐய்யோ
என்றும் இது முடியாதா..

வாழ்க்கை என்றால் என்னவென்று - என்
நன்பர்களை  பார்த்தே அறிந்து கொண்டேன்
வலி என்றால் என்னவென்றும் – அவர்கள்
பிரிவில் நானும் உணர்ந்து கொண்டேன்..

உறக்கம் இங்கு உறங்கிப் போனது – என்
உணர்வெல்லாம் முடங்கிப் போனது....

அன்பால் உறைய வைத்த உறவுகளே
உயிரை எடுப்பதும் சரிதானோ ???????
என்றும் விட்டுக் கொடுக்காத  நண்பர்களே
நம்மை விட்டுச் செல்வது முறைதானோ ???????

                     “ சௌந்தர்யா ”



1 comment: