மனைவிக்கு ஒரு மடல்
.
.
.
காகிதங்கள் நனையவே
காதலோடு எழுதுவது ...
அணைப்பை கண்டேன் உன்
அன்பில் – அன்பே
அன்னையை கண்டேன் உன்
உருவில்
சேதங்கள் இல்லையடி
சேகரிப்பேன் உன்
சிரிப்பெல்லாம்
கோபங்கள் இல்லையடி –
நிதம்
இரசிப்பேன் உன்
செயலெல்லாம்
வேதங்கள் தானா உன் வார்த்தை
வேதனை மறக்கிறேன் நானடி
கீதங்கள் தானா உன்
சிரிப்பு
இன்னிசை தோற்க்குது
பாரடி
விடுகதையாய் உன் மௌனம்
வினாவாகிப்போகிறது,
தொடர்கதையாய் என்
உணர்வு – உன்னை
தேடியே அலைகிறது J
அமிர்தமும் விஷமாகும்
நீ இல்லா பொழுதென்றால்
நஞ்சும் அமுதாகும்
உன் கையால் தருவதென்றால்
சிக்கி தவிக்க ஆசையடி –
உன்
மனக்கதவு ஓரத்தில்
சிந்தை எல்லாம்
துடிக்குதடி – நான்
உன்னை கானும் நேரத்தில்
ஓவிங்கள் பெரிதல்ல
உன்னோடு ஒப்பிடுகையில்
ஓசைகளும் நிசப்தமே
நீ பேசா தருணத்தில்
பாதைகள் நீள வேண்டும்
உன்னோடு நடக்கையிலே
வேதனை கூட குறைந்திடும்
உன் மடி மீது
சாய்ந்தாலே
கவிதைகள் கொட்டுதடி
உனக்கென்று
எழுதிவிட்டால்
காயங்கள் இல்லையடி – நீ
மட்டும்
இருந்துவிட்டால்
உதிரமே நீயானாய்
உறையவிடு உடம்பிலே
உலகமே நீயானாய்
வாழவிடு உன்னுள்ளே J
-----சௌந்தர்யா-----
No comments:
Post a Comment