Monday, 26 May 2014

                உறவொன்று பிரிகையில்

உயிரொன்று பிறக்கையிலே
தெரியாது யாருக்கும்
உயிர்பிரியும் வலி L

இழப்பொன்று நேர்ந்ததம்மா-
அன்று என் வாழ்வினிலே
இழந்தேனே என்னையும்
என் தங்கையின் சாவினிலே

வித்தியாச வாழ்க்கை இது
விழா மட்டும் காண முடியாது
எத்திசையிலும் தேடி வரும்
எதையும் தடுக்க முடியாது

பிறப்பினிலே இருக்கும் சுகம்
இறப்பிற்க்கு கிடையாது
இரண்டும் ஒரு சம்பவமே – அது
யாருக்கோ நடக்கையிலே

சென்றுவிட்டால் அவளோ மண்ணோடு மண்ணாக

மாறவில்லை அவள் நினைவு என்னோடு பினியாக L

No comments:

Post a Comment