Monday, 26 May 2014

அப்பா

மூன்று முடுச்சில் வாழ்வை தொடங்கி
மூன்று வேலையும் கருவியாய் இயங்கி
உறக்கம் மறந்து உழைப்பவன் தான்
உலகம் வியக்க பிறந்தவன் தான்

பட்டமாய் எங்கும் பறந்திடுவான் – வீட்டில்
சட்டங்கள் பல இயற்றிடுவான்
மனைவியை என்றும் காத்திடவே
பதவிகள் பல  ஏற்றிடுவான்..

ஒவ்வொரு பெண்ணும் சுமந்திடுவாள்- பிள்ளையை
பத்து மாதம் தன் வயிற்றில்
ஒவ்வொரு ஆணும் சுகம்பெறுவான் – பிள்ளையை
வளர்த்தே அவன் நெஞ்சத்தில்

பிள்ளை பிறந்த தருணத்தில் – கட்டி
பினைத்தே முத்தம் இடுவான்
எல்லையின்றி இரவெல்லாம் மார்பில் – தட்டி
அனைத்தே உறக்கம் கொடுப்பான்

பள்ளிக்கு அணுப்பி படிக்க வைப்பான் – அதன்
மழலை பேச்சில் வேதனை மறப்பான்
ஆண் பிள்ளையை அதட்டி வைத்தாலும்
பெண் பிள்ளையென்றால் தன்னை
பெற்றவள் என்றே சொல்லி வளர்ப்பான் J

கை பிடித்து இவன் வளர்த்த பிள்ளை- ஒருவன்
கையில் பிடித்து கொடுக்கும் போதே
மகள் மனது மன்றாடும்
ஐந்து வயது பிள்ளையாய்
உன் அருகில் விளையாடித் திரிந்தேனே
அப்பா
இருபத்தைந்து வயது வந்ததேனோ
உன்னை பிரிந்து வாழத்தானோ...

தாலி கட்டி முடித்த பின்
தாரம் என்ற ஸ்தானத்தில் – மகள்
ஆசிர்வாதம் வாங்கும் போது
ஊற்றாய் பெருகும் கண்ணீர் அங்கு J

உடல் ஏற்காவிடிலும்
உள்ளம் கேட்காவிடிலும்
கீழ் குமிந்து மகளை தொட்டு தூக்கி
பதினாரும் பெற்று பெறு வாழ்வு வாழ்கவென்று
வாழ்த்திவிட்டு சொல்லிடுவான்

அப்பா என்று நீ சொல்லும்
 சொல்லில் தான் நான் வளர்ந்தேன்
உன் பெயரை சொல்லி அழைக்கும் போதே
மகிழ்ச்சியை முழுதாய் நான் கண்டேன்

கடமை என்ற ஒன்று தான்
அனைவரையும் பிரிக்குது இங்கு தனிதனியாய் – அதே
கடமை என்ற ஒன்று தான்
யாருடனோ நம்மை இணைக்குது எங்கோ புதுவிதமாய்

என் மகள் என்று நானும்
தந்தை மட்டும் தான் என்று நீயும்
என்றும் இப்படியே இருந்துவிட்டால்
உறவு முடிந்து போகுமம்மா
உலகம் அர்த்தமற்று ஆகுமம்மா J

முடிவென்று நினைத்துவிட்டால் வாழ்வெங்கு தொடரும்
பிரிவொன்று கண்டால் தான் உறவிங்கு வளரும் J J J







No comments:

Post a Comment