Monday, 26 May 2014

                ஏழையின் அழுகை

பல வழிகள் கொண்ட உலகினிலே
மனவலியோடு வாழும் சிறுமி  நான்

உணர்வை உணர ஆள் இல்லை
உயிரை உலகில் எவரும் மதிப்பதில்லை

கையில் காசு இல்லாவிடில் – கல்வி
நிறுவனங்கள் நமக்கு கேள்விக்குறி ??????

மெழுகிலே மட்டும் என் வெளிச்சம்
வாழ்க்கையில் எனக்கு இரவு மட்டும்

வல்லரசு நாடாக துடிக்கும் வேலையிலே – இன்னும்
உலகின் மூலையில் தவிக்கும் ஏழைகளே

கண் இருந்தும் நாங்கள் குருடர்களே
கண்ணீரில் நகர்கிறது  எங்கள் வருடங்களே

வாழ்வே எங்களுக்கு ஓர் சோகம்
ஏழைக்கென்றும் ஓர் கீதம்

மஞ்சளும் குங்குமமும் மாறாத வழக்கமே
பஞ்சமும் பட்டினியிம் குறையாத குற்றமே L



No comments:

Post a Comment