Monday, 26 May 2014

                                                பயணம்
         ( நூறடிக்கவிதை)

எட்டுத்திக்கும் இருள் மட்டும்
எட்டிப்பிடிக்க ஏதுமில்லை
பார்த்து பழக ஆள் இல்லை
பேசி சிரிக்க வழியும் இல்லை

திக்கு முக்கும் திரும்பி படுத்து
குறுகிக் குறுகி தத்தளித்து
நாட்கள் பல பொருத்திருந்து
வெளியில் வந்தோம் எட்டி உதைத்து

எட்டி உதைத்து வந்த நம்மை
கட்டி தழுவி கொஞ்சினால் அன்னை
இதுதான் தாய்மையின் அடையாளம்
அதுதான் நமக்கு முதல் பயணம்

தத்தி தத்தி நடந்திருந்து
தடுக்கி விழுந்து மீண்டும் எழுந்து
எட்டி ஓடி நடை பழகி – வாழ்வில்
எட்டு வைத்தோம் முதல் அடி
வீட்டுக்குள் மட்டும் வாழ்ந்திருந்து
வேதனை எல்லாம் மறந்திருந்து
விளையாட மட்டும் சென்றோம் “பாதம் பதிக்க”
பள்ளியோ அழைத்தது நம்மை “பாடம் படிக்க”

பத்து மாதம் தாயின் பாரம்
பன்னிரு வருடம் பள்ளியின் பருவம்
பாடம் தவிர அனைத்தும் படித்தோம்
நண்பர்கள் சேர்ந்து கூட்டம் அமைப்போம்

 நாட்கள் ஓடி தொலைந்து போக
விடைபெறும் நாளும் அருகில் தோன்ற
விடைகள் சொல்ல  முடியாமல்
விடைகொடுக்கவும் முடியாமல்
விடைபெற்றது நம் பள்ளிப் பருவம்
அதுவே நமக்கு “இரண்டாம் பயனம்”

 நேரம் போல நம் வாழ்வு
நிற்காது என்றும் சுழன்றோடும்
சிறு பிள்ளை வயதோ உறங்கி நகர்ந்து
கல்லூரி சென்று கண் விழிக்கும்


சின்ன சின்ன சில்மிஷங்கள்
சிரித்து மகிழும் நிமிஷங்கள்
படிப்பது போல வேஷங்கள்- இப்படி
நகர்ந்தது  நம் வருஷங்கள்

வேலை இல்லா பட்டதாரி
வேதனையோடு வேண்டிடுவான்
வேலை கிடைத்த மாந்தன் அவனோ
ஊதியம் கூட்டிட வேண்டிடுவான்
வேண்டி வேண்டி மறத்தது எண்ணம்
கோவில்களோ நிறைந்த வண்ணம்

வேதனை தீர வேண்டும் என்று வேண்டுதல் வைத்தவர் அன்று
இன்று கடவுளே வேண்டுது வேண்டுதல் வேண்டாம் என்று

வண்ணமயமான வாகனத்தில்
வசதியாய் செல்வபவன் அருகினிலே
தட்டை நீட்டி சிறு இளைஞன் காசு கேட்டு கெஞ்சிடுவான்
ஒற்றை ரூபாய்  போட இயலாது
தட்டை நகற்றி விரைந்திடும் தருணம்
யோசிக்க வைக்குது கேள்வி ஒன்று
“யார் இங்கே பிச்சைகாரன் என்று” ????

காதலே உயிராய் பாதி உயிர்
உலவுது இந்த உலகினிலே
காதலுக்காக உயிரையும் விட்டு
மறையுது இம் மண்ணினிலே
விரைவாய் பெருகுது இங்கு தற்கொலையும்
அதனால் குறைந்தது நம் மக்கள்தொகையும்

பணம் இருந்தால் போதும் பாசம் கண்ணை மறைக்கும்
அது இருந்தால் மட்டுமே உறவுகள் வீட்டில் கை நனைக்கும்
பஞ்சம் கொஞ்சம் வந்தால் போதும்- ஒற்றை
பனை மரம் போல் வாழ்வும் மாறும்

தங்கம் இருந்தால் திருட்டு பயம்
இல்லையென்றால் வாங்க ஏங்கும் மனம்
தேவை இருந்தால் கெஞ்சிடும் உலகம்
இல்லையென்றால் மொய்த்திடும் கழகம்
இல்லாததற்க்கே  ஆசை நமக்கு- இருப்பது
போதும் நினைப்பவர் எத்தனை???

தேவையற்ற பொருட்கள் எல்லாம் பட்டியல் போட்டு
அடுக்கி வைப்போம்
ஒருபிடி சோறு இச்சை செய்ய
ஒரு மணி நேரம் யோசிப்போம்
காலம் என்பது நிலையல்ல
காணாமல் போகும் களவல்ல
கையில் பிடிபடா காற்றை போல
கறைந்து போகும் ஊற்றை போல

எத்தி எத்தி ; தத்தி தத்தி
தவழ்ந்து நிமிர்ந்து உலகம் சுற்றி – கொஞ்சம்
உட்கார்ந்து பார்த்தால்
உணர்ச்சிகள் சொல்லும் சட்டென்று
என்ன வாழ்கை இதுவென்று??

கவிஞன் அவன் ஆனாலும்; கோடிஷ்வரன் ஆனாலும்
கையேந்தி நிற்பவன் ஆயினும்
வாழ்க்கை பயணம் மாறாது

கற்று தெரிந்து ; தெளிந்து பெற்று
மறுபடி மறுபடி தவறு இளைத்து
சரியை தேடி ஓடி செல்லும்
முக்கிய தருணம் மூன்றாம் பயணம்”

வாழ்வை படிபடியாய் வர்ணிக்கும்
நூறு அடிக்கவிதை இதுவம்மா
பயணம் என்பதே இதன் தலைப்பு
அதுதான் நம் வழிநடப்பு

உயிர் மட்டும் அல்ல
நேரம் மட்டும் அல்ல
வார்த்தை மட்டும் அல்ல
போனால் திரும்ப கிடைக்காத மற்றொன்று
பிறப்பில் தோன்றி இறப்பில் முடியும்
வாழ்க்கை பாதையும் மறுபடி வாராததுதான் J



                      “  சௌந்தர்யா  ”

No comments:

Post a Comment