சந்திப்பு
மூடியிருந்த மேகம்
எனக்குள்ளே தாகம்
திறக்கபட்ட கதவு- இன்னும்
தொடங்காத நம் உறவு
வெட்டவெளியில் நிலவு
என்னுள்ளே பல கனவு
அறைக்குள்ளே ஜன்னல்
அதனுள்ளே ஒரு மின்னல்
என்னென்னவோ
நம் எதிர்பார்ப்பு- நம்
நிச்சயத்திள் தான் நமக்கு முதல் சந்திப்பு
எட்டி பார்த்தாய் உன் இரு விழிகளாள்
பிறக்கபட்டேன் அன்று இரண்டாம் முறை
இன்று வரை நீ தான் என் வாழ்க்கை பிறை
கண்டேன் கவிதையாய் உனை கொண்டேன்
நின்றேன் நிலைத்தே உனக்குள் நிரைந்தேன்
சிந்திக்கவில்லை ஒரு நொடியும்
சற்றே
சந்தித்ததில் சகலமும் வென்றேன் !!!!!
No comments:
Post a Comment