Monday, 26 May 2014

                                                                தெரு ஒர மாங்கா பாட்டி

பூட்டு சாவி தேவையில்லை
பூட்டி வைக்க வேலையில்லை
காலை மாலை பள்ளிகள் விட்டதும்- குழந்தைகள்
தேடி ஓடும் பாட்டியின் கடைக்கு ஆலமரமே எல்லை..


தேங்கா மாங்கா நெல்லிக்கா
கிடைக்கும் இங்க கொத்து கொத்தா
கை நீட்டி நீ வாங்கிகிட்டா
மனசும்  நிறையும்  நான் பாசத்தோட கொடுத்துபுட்டா..

கெஞ்சி கூவி நாளெள்ளாம் இத வித்து போனா
அந்த
அஞ்சுபத்துல என்னோட ஒரு  நாள்
பஞ்சம் மறஞ்சு போகும்
பட்டினி கொறஞ்சு போகும்

பள்ளிகூடம் படிக்கல ஆனா
பள்ளியின் வாசலெல்லாம் எனக்கு வீடு
பாடம் சொல்லி தர தெரியல – கைநிறைய
அள்ளி தந்தே ஓடுது தினமும் என் பொழப்பும்............



No comments:

Post a Comment