ஒருசிறு வரி
உயிர்த்தோழனுக்கு
அச்சமில்லாத உணர்விது எனினும்
படபடக்குது இதயம் அது...
சாய தோல் கொடுத்தான் சட்டென்று சாய்ந்துவிட்டேன்
மனம் மகிழ மடி கொடுத்தான் பட்டென்று விழுந்துவிட்டேன்
கானாத மாற்றங்கள் அவன் கொடுத்தான் எனக்கிங்கே
காயாத ஈரங்கலும் என் கண்ணில் காய்ந்தது அவன்
உறவாலே...
இதன் பெயர் எனக்கு தெரியவில்லை
அதன் வலி எவரும் அரியவில்லை
உள்ளுக்குள் இருக்குது உருகாமல்
கண்ணுக்குள் உருத்துது கரையாமல்
காதல் என்று சொல்ல முடியாது –இதை
நட்பு என்றால் அது மிகையாகாது..
சத்தம் இல்லாத யுத்தம் இது
நித்தமும் தொடரும் சொந்தம் இது
உடல் சோர்ந்தாலும் என் தோழனே தாங்கி பிடிக்க வேண்டும்
உயிர் பிரிந்தாலும் அவன் மடியிலே நான் உயிர் துறக்க
வேண்டும் J J J
No comments:
Post a Comment