விடுதலை
சுதந்திரம் கொண்ட நாடு
இது – இங்கு
சுகம் பெற மட்டும்
வழியில்லை
சொந்தம் கொண்டாட
உறவில்லை
சோகம் மறைத்தும்
பயனில்லை
எண்ணம் எல்லாம் ஏட்டோடு
எழுதி வைத்தான் அன்று
பாட்டோடு
நித்தம் எல்லாம்
நிசப்தமே – இங்கு
நித்திரையிலும் இல்லை
நிம்மதியே
வன்மை மட்டும்
தொடர்கிறதே
உண்மைக்கோ இல்லை
உயர்வுகளே
சிகரங்கள் தொட
நினைத்தாலும்
சிதைவுகளே முடியாமல்
தொடர்கிறதே..
பேசி சிரித்தால் வாயாடி
பேசாமல் போனால்
நயவஞ்சகி
அமைதி கொண்டால்
அழுத்தக்காரி
ஆத்திரம் கொண்டால்
கோபக்காரி - பிறறை
பற்றி பேசினால்
சூழ்ச்சிக்காரி- தன்னை
பற்றி பேசி போனால்
சுயநலவாதி
போர் தொடுத்து உயிரை
விட்டது அந்தக்காலம் - இன்று
பேர் வைத்தே உயிரை
எடுக்குது இந்தக்காலம் L
சுதந்திர நாட்டில் சுதந்திரம் இல்லை – இங்கு
விடுதலை கிடைத்தும்
விடுவிக்கவில்லை
ஒன்று பட்டு உண்டு
வாழ்வோம்
என படித்தால் மட்டும்
போதாது – உலகே
தனியே இயங்கும்
செயர்க்கை வாழ்க்கை
மிகிழ்வு நமக்கு தாராது
...... J
-------------சௌந்தர்யா-------------
No comments:
Post a Comment