Monday, 26 May 2014

பணம் மாற்றுது  இங்கு மனிதனை
தலைகீழாய்...

அள்ளி அள்ளித் தருவேன் என்பான் – இதை அவன்
பஞ்சத்தில் வாடும் போது மட்டுமே சொல்வான்
உதவி செய்ய நினைப்பேன் என்பான் – அதை அவன்
துணையற்று இருக்கும் போது மட்டுமே உறைப்பான்

உலகமே இங்கு இப்படித்தான்
பதவிபலம் இருந்தால் போதும்
பந்தாவுக்கு பத்து காரு
பின்னால் நடக்க நூரு பேரு

பணம் இருக்கும் நினைப்பினிலே - எவறையும்
மதிக்காமல் மண்ணில் வாழ்ந்திடுவான்
எவரும் காசு கேட்டு கை நீட்டினாலும்
ஏழனமாய் தூற்றிப் பேசிடுவான்

பிச்சைக்கு கூட காசு போடாதவனே- உலகின்
முதல் பிச்சைக்காரணடா..




இல்லாதவனை துறத்துபவன்
இல்லாமல் போக நாள் ஆகாது
இயலாதவனை மதிக்காதவன்
கை கால் இருந்தும்
முடம் என்றால் தவறாகாது J J J

எச்சி சோறையும் தந்துவிட்டு
கொஞ்சம் மிச்சம் இருந்தால்
வைத்து போ என்பது போல..
உலகில் செய்யாதவன் இருப்பதை விட
செய்வதை சொல்லி காட்டி வாழ்பவனே
அதிகம் உலவித்திரிகின்றான் J J J

ஆறடிக்குள்  நுழைவதர்க்கே ஆயிரம் ஆட்டம் நடக்குதிங்கே
அடுத்த நிமிடம் இருப்போமா தெரியாது யாருக்குமங்கே
கெட்டியாக பணத்தை கட்டி பிடித்து செத்தாலும்
வெட்டியானுக்கு தான் போய் சேரும்- பணத்தை
கொட்டி புதைந்தவர் எவரும் இல்லை J

இதை முழுதாய் உணர்ந்தவன் மட்டுமே
உயரத்தில் இருப்பான் இறந்த பின்னும் J J
மதிக்கப்படுவான் மறைந்த பின்னும் J J

-    சௌந்தர்யா -

No comments:

Post a Comment