தமிழ்
தமிழ் என்று சொல்லும்
போதே
எவருக்கும் புல்லறித்து
போகுதம்மா
மொழி என்று சொல்லும்
போதே
தமிழுக்கு ஈடு இணை
இல்லையம்மா
உறக்கச் சொல்ல வேண்டும்
தாய்மொழி தமிழென்று
உறங்கும் போதும்
நினைக்க வேண்டும்
நம் நாடு தமிழ்நாடென்று
விண்ணாளச் சென்றாலும் –
பிறந்த
மண்ணை ஒரு போதும் மறக்க
வேண்டாம்
பற்பல மொழி கற்றாலும் –
தமிழ்
மொழியை ஒரு போதும்
ஒதுக்க வேண்டாம்
காலங்கள் பல கடந்தும்
மொழிகளுக்கு
இல்லை பழமையே
சேதங்கள் அடைந்த போதும்
சிதையவில்லை
அதுதான் இதற்க்கு
வலிமையே
ஆங்கிலேயர் சென்றாலும்
ஆங்கிலம் செல்லவில்லை
ஆயிரம் படித்தாலும்
தமிழுக்கு அழிவில்லை
பிணைத்து வைப்போம்
உடலோடு அதை
நிலைக்க வைப்போம் உயிர் இருக்கும் வரை
“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்”;
பாரதி கண்டான் அன்று –
அதை
உணர்த்தி காட்டுவோம் நின்று J
-----------சௌந்தர்யா ---------
No comments:
Post a Comment