செவ்வானம் சிவந்தது
மேகங்களின் முத்தத்தில்
என் மனமோ விழுந்தது
அவள் புன்னகையின் சத்தத்தில்
காதல் கொண்டேன்
மொத்தத்தில்
மாறி விட்டேன்
பித்தத்தில்
முத்தத்தில்
சத்தத்தில்
மொத்தத்தில்
பித்தத்தில்
என்றும் அவளே என் இரத்தத்தில்
என் ஒற்றை
சொந்தம் நீயடி
இருதய துடிப்பாய் உன் நினைவடி
மூன்றெழுத்தானது உன் பெயரடி
உலகில் நான்காம்
கனி நீயடி
ஐம்பெரும் காப்பியங்கள் கூட காணவில்லை
இப்படி ஓர் அழகியை
அருசுவை கூட வேண்டாமே
ஏழாம்பிறை நீ இருக்க – உலகில்
எட்டு திக்கும் ஒட வைக்கும்
நவரசத்தின் நாயகி நீ – உனை
பத்துபாட்டில் பாடவில்லை
பதினொரு திருமுறைகள் வாழ்த்தவில்லை
பனிரெண்டு வருட வனவாசம் ஏதும் இருக்கவில்லை
பதிமூன்று நொடி உனை பார்த்தாலே எவரும்
பதிநான்கு வயதாய் மாறி போவாரே
பதினைந்து பதினாரு நூற்றாண்டு உன்னோடு வாழ
விருப்பமடி
பதினேழு தடைகள் வந்தாலும் – கஜினியை போல்
பதினெட்டாம் முறையும் படையெடுப்பேன்
பத்தொன்பதாம் படி மேல் நீ அமர்ந்தாலும்
இருபது முறை விழுந்து எழுந்தேனும் உன்னை
வந்து நான் அடைவேன்
-சௌந்தர்யா-
No comments:
Post a Comment