Tuesday, 27 May 2014
கணவனுக்கு ஒரு கவி
.
.
.
எளிதாக கிடைத்த உன்
உறவு
என் வாழ்வில் வந்த புது
வரவு
வசந்தங்கள் எல்லாம்
வந்தது உன்னாலே
வருத்தங்கள் எல்லாம்
மறைந்தது தன்னாலே
என்ன உள்ளது பெண்ணில்
ஆண் கவிதை படி
புரிந்துபோகும்
என்ன இல்லை ஆண்-ல்
பெண் மனதை திற
தெரிந்துவிடும்
கண்ணுக்குள் நீ வேண்டும் – கணவனே
உன்னுடனே என் வாழ்க்கை
கடக்க வேண்டும்
நெஞ்சுக்குள் நீ வேண்டும் – நண்பனை
போல் நீ என்னுடனே என்றும் தொடர வேண்டும்
தினம் ஒரு கவி நீ
படைப்பாய் – அதை
தினந்தோறும் நான்
படிக்கவேண்டும்
இனி ஒரு பிரிவு
வந்தாலும் – உனக்கு
முன்னமே நான் இறக்கவேண்டும்
அன்பென்ற வார்த்தையிலே
- இவ்
உலகம் நகர்கிறது
அதைமட்டும்
வாழ்க்கையிலே – என்
மனம் கேட்டு
துடிக்கிறது
உணவு கூட திகட்டிவிடும்
-
உறவு திகட்டுவதில்லை
கனவு கூட கலைந்துவிடும்
உன் நினைவு மறைவதில்லை
சற்று சோகம் உனக்கென்றால்
சஞ்சலங்கலை நானே தீர்க்கவேண்டும்
நெற்றி பொட்டு அழியாமல்
உனக்கு முன்னே நான்
உயிர் துறக்க வேண்டும் J
-
சௌந்தர்யா -
மனைவிக்கு ஒரு மடல்
.
.
.
காகிதங்கள் நனையவே
காதலோடு எழுதுவது ...
அணைப்பை கண்டேன் உன்
அன்பில் – அன்பே
அன்னையை கண்டேன் உன்
உருவில்
சேதங்கள் இல்லையடி
சேகரிப்பேன் உன்
சிரிப்பெல்லாம்
கோபங்கள் இல்லையடி –
நிதம்
இரசிப்பேன் உன்
செயலெல்லாம்
வேதங்கள் தானா உன் வார்த்தை
வேதனை மறக்கிறேன் நானடி
கீதங்கள் தானா உன்
சிரிப்பு
இன்னிசை தோற்க்குது
பாரடி
விடுகதையாய் உன் மௌனம்
வினாவாகிப்போகிறது,
தொடர்கதையாய் என்
உணர்வு – உன்னை
தேடியே அலைகிறது J
அமிர்தமும் விஷமாகும்
நீ இல்லா பொழுதென்றால்
நஞ்சும் அமுதாகும்
உன் கையால் தருவதென்றால்
சிக்கி தவிக்க ஆசையடி –
உன்
மனக்கதவு ஓரத்தில்
சிந்தை எல்லாம்
துடிக்குதடி – நான்
உன்னை கானும் நேரத்தில்
ஓவிங்கள் பெரிதல்ல
உன்னோடு ஒப்பிடுகையில்
ஓசைகளும் நிசப்தமே
நீ பேசா தருணத்தில்
பாதைகள் நீள வேண்டும்
உன்னோடு நடக்கையிலே
வேதனை கூட குறைந்திடும்
உன் மடி மீது
சாய்ந்தாலே
கவிதைகள் கொட்டுதடி
உனக்கென்று
எழுதிவிட்டால்
காயங்கள் இல்லையடி – நீ
மட்டும்
இருந்துவிட்டால்
உதிரமே நீயானாய்
உறையவிடு உடம்பிலே
உலகமே நீயானாய்
வாழவிடு உன்னுள்ளே J
-----சௌந்தர்யா-----
Monday, 26 May 2014
ஓவியம்
அங்கலாய்த்துப் போனேன் –
நான்
ஆச்சர்யத்திலே நின்றேன்
இன்னிசையும் மறந்தேன் – நெஞ்சில்
ஈரமொன்று கண்டேன்
உளி கண்ட சிலையை விட
ஊமை உருவமே உயர்வென்று
கொண்டேன்
எட்டாவது அதிசியமோ
என்றே வியந்தேன்
ஏதோ ஒன்று ஈர்ப்பதை
நானும் அறிந்தேன்
ஐயங்கள் இல்லாது அதிசயத்தை
அடைந்தேன்
ஒன்றல்ல ஓராயிறம் முறை
காணத் துடித்தேன்
ஓயாமல் ரசித்தே கண்
எடுக்க மறுத்தேன்
ஔ வண்ணமே எனை அங்கு பறிகொடுத்தேன்
படர்ந்தேன்
பினைந்தேன்
அஃதனைத்திலும்
தொடர்ந்தேன் – எனை
மேவியதையும் உணராது
அவ்வோவியத்தில் அகிலமும் மறந்து என்னையே நானும் இழந்தேன் ...
சௌந்தர்யா
செவ்வானம் சிவந்தது
மேகங்களின் முத்தத்தில்
என் மனமோ விழுந்தது
அவள் புன்னகையின் சத்தத்தில்
காதல் கொண்டேன்
மொத்தத்தில்
மாறி விட்டேன்
பித்தத்தில்
முத்தத்தில்
சத்தத்தில்
மொத்தத்தில்
பித்தத்தில்
என்றும் அவளே என் இரத்தத்தில்
என் ஒற்றை
சொந்தம் நீயடி
இருதய துடிப்பாய் உன் நினைவடி
மூன்றெழுத்தானது உன் பெயரடி
உலகில் நான்காம்
கனி நீயடி
ஐம்பெரும் காப்பியங்கள் கூட காணவில்லை
இப்படி ஓர் அழகியை
அருசுவை கூட வேண்டாமே
ஏழாம்பிறை நீ இருக்க – உலகில்
எட்டு திக்கும் ஒட வைக்கும்
நவரசத்தின் நாயகி நீ – உனை
பத்துபாட்டில் பாடவில்லை
பதினொரு திருமுறைகள் வாழ்த்தவில்லை
பனிரெண்டு வருட வனவாசம் ஏதும் இருக்கவில்லை
பதிமூன்று நொடி உனை பார்த்தாலே எவரும்
பதிநான்கு வயதாய் மாறி போவாரே
பதினைந்து பதினாரு நூற்றாண்டு உன்னோடு வாழ
விருப்பமடி
பதினேழு தடைகள் வந்தாலும் – கஜினியை போல்
பதினெட்டாம் முறையும் படையெடுப்பேன்
பத்தொன்பதாம் படி மேல் நீ அமர்ந்தாலும்
இருபது முறை விழுந்து எழுந்தேனும் உன்னை
வந்து நான் அடைவேன்
-சௌந்தர்யா-
இந்த வலி மறையாதா –
ஐய்யோ
என்றும் இது முடியாதா..
வாழ்க்கை என்றால்
என்னவென்று - என்
நன்பர்களை பார்த்தே அறிந்து கொண்டேன்
வலி என்றால்
என்னவென்றும் – அவர்கள்
பிரிவில் நானும்
உணர்ந்து கொண்டேன்..
உறக்கம் இங்கு உறங்கிப்
போனது – என்
உணர்வெல்லாம் முடங்கிப்
போனது....
அன்பால் உறைய வைத்த
உறவுகளே
உயிரை எடுப்பதும்
சரிதானோ ???????
என்றும் விட்டுக்
கொடுக்காத நண்பர்களே
நம்மை விட்டுச் செல்வது
முறைதானோ ???????
“ சௌந்தர்யா ”
Subscribe to:
Posts (Atom)