Wednesday, 30 July 2014

இதயத்தில் சுமையொன்று
இடரிதினம் கொல்கிறது
இதுதானோ வலியென்று
இளமைமனம் அழுகிறது

துன்பத்தை ஏற்காவிடில்
இன்பம் அது தெரியாது
பிரிவொன்று காணாவிடில்
உறவின் அருமை புரியாது

உன் காயங்களின் ஆழங்கள்
முழுதாகப் புரிகிறது
உன் கண்ணீரின் ஈரங்கள்
என் நெஞ்சை சுடுகிறது

ஆசை பாசம் காதல் போல
கோபம் கொஞ்சல் நட்பு போல
பிரிவும் கூட இப்படித்தான்
வாழ்க்கையில் இருக்கும் ஒரு‘படி’தான்


நீ தாங்காத சோகமில்லை
உன்னால் தாங்கமுடியாத சோகமும் இல்லை
மேகம் போலதான் சோகங்களும்
நிலைத்து என்றும் நிற்காது !!

அழுகை என்பது புனிதமாகுது
உனக்காய் நான் அழுகையிலே
என் பெண்மை என்பதும் பெருமிதமடையுது
உன் கண்ணீரை துடைக்கும் வேலையிலே !!

சற்று கூட விழகமுடியவில்லை
ஒவ்வொரு நொடியும் உன் நினைவின் அலை
நித்திரை கூட இனித்தேவையில்லை
உன் சோகம் முடிந்து நீ சுகம் பெரும் வரை

கஷ்டம் என் தோழிக்கே என்றாலும் – இறைவா
அதன் காயங்களை எனக்கே பிரித்துக்கொடு

வருத்தங்கள் என் தோழிக்கே என்றாலும் – இறைவா
அதன் வலிகளை எனக்கே பிரித்துக்கொடு

சோகங்கள் என் தோழிக்கே என்றாலும் - இறைவா
அதன் வேதனையை எனக்கே பிரித்துக்கொடு

உண்மையான உறவுகளுக்கு
பிரிவுகளெல்லாம் பிரிவல்ல
காற்றை போல சுழன்றுவரும்
வாழ்க்கை முடியும் வரை தொடர்ந்துவரும்


உன் பாரங்கள் எல்லாம் தீரும் வரை
என் பாதங்கள் உனைவிட்டு நகராது
உன் காயங்கள் எல்லாம் ஆரும் வரை
என் கவிதைகள் கூட புன்னகைக்காது


அமைதியான பயணம் இது
அழுகையான தருணம் இது
இன்றே இதை ஏற்றுவிடு
மீண்டும் ஒருமுறை வாராது


பயங்கள் எல்லாம் பயந்திடட்டும்
கொஞ்சம் சிரிப்புடன் உலகைப்பார்
காயங்கள் எல்லாம் காயப்படட்டும்
கொஞ்சம் கண்ணீர் துடைத்து விழித்துப்பார்

உன் ஒவ்வொரு துளி கண்ணீரும்
என் உதிரமாய் இங்கு வழிகிறது
போதும் அழகே நிருத்திவிடு
என் உயிர் இறக்கப்போகிறது.


                --சௌந்தர்யா--

No comments:

Post a Comment