தனிமையில் நான்
.
.
.
கூட்டம் மிகுந்த சபையானாலும்
அருகில் நீ இல்லாது போனால்
தனிமையில் நான்
தேசம் தாண்டி வாழ்ந்திருந்தாலும்
நினைவில் நீ இல்லாத போது
தனிமையில் நான்
பக்கம் உன்னோடு இணைந்திருந்தாலும்
எனை பற்றி எண்ணம் உனக்கு இல்லாதபோது
தனிமையில் நான்
காதலோடு காத்திருந்தாலும்
காத்திருக்கும் தருணம்
தனிமையில் நான்
கூச்சல் இரைச்சல் சூழ்ந்திருந்தாலும்
உன் குரல் கேட்காவிடில்
தனிமையில் நான்
தனிமையில் நான்
என் தனிமையில் வாழ்பவள் நீ
இனி தனிமையே எனக்கில்லை
தனிமையை நிரப்ப வந்தவள் நீ
என் தனிமையை நிரப்ப என்றேனும் நீ
வருவாய் எனில்
வாழ விரும்புகிறேன்
.
.
தனிமையில் நான் !!
- சௌந்தர்யா –
No comments:
Post a Comment