திரும்பிப் பார்க்கிறேன்
திங்கட் கிழமை
தினசரி காலை
திணரும் சாலையில்
கைகளுக்குள் என் கைபிடித்து
பிடிக்காத பள்ளிக்கு
பிடிவாதமாய் முதலில்
அனுப்பி வைத்ததை , சற்றே
சிரித்தே ஒரு முறை திரும்பிப்பார்க்கிறேன்..
பயிற்ச்சிகள் ஒரு பக்கம்
அலங்காரம் மறு பக்கம்
பெற்றோர்கள் கூட்டம்
பெருகி வழிந்திட
ஆண்டுவிழா நடக்கும்
அலங்கார மேடையில்
அழுகுரலோடு என் ஓரிரு
வார்த்தைக்கு எதிர்பார்த்து கிடக்கும்
அன்னை தந்தையின் ஆராவாரத்தை
ஆச்சர்யத்துடன்
இன்றும் ஒரு முறை திரும்பிப்பார்க்கிறேன்...
விளையாட்டு புத்தியே விளைந்திருக்க
விதவிதமாக நாட்கள் நகர்ந்து கிடக்க
மகிழ்வை மட்டுமே கண்ட உள்ளம்
மரணத்தை கண்டதும் கண்ணீர் வெள்ளம்
மஞ்சக்காமாளையில் தங்கை இறந்ததை
சவத்தை கட்டி நானும் அழுததை
கண்ணீரோடு
கவலையில் ஒரு முறை திரும்பிப்பார்க்கிறேன்..
அன்னாந்து பார்த்து குமியிம் போதே
அகிலமும் இங்கே திசைமாறுதே
ஆட்டம் எல்லாம் முடித்துவிட்டு
பேருக்கேதோ படித்துவிட்டு
தெரியாத கேள்விக்கு நான்கு பக்கம்
உரைநடை எழுதி கொடுத்துவிட்டு
எல்லாம் தெரிந்தது போல தெளிவாய்
நடித்ததை..,
தேர்வைபற்றி யாரேனும் பேசும் போதெல்லாம்
திரும்பிப்பார்க்கிறேன்
எதிர்பார்ப்போடு இதயம் துடிக்க
நினைவுகள் பல படம் எடுக்க
நித்திரை இல்லாது அயர்ந்திருக்கையில்
ஒரு பாட்டுச்சத்தம் அது நமக்கு மட்டும்,...
இரவு பன்னிரெண்டு மணி
பகல் தொடங்கும் முதல் நொடி
முதல்நாள் இரவின் நீளமும்
மறுநாள் பகலின் ஆழமும்
முழுதாய் விளங்கும்
வாழ்த்துக்கள் பெருகும்
பிறந்தநாள் கொண்டாட்டத்தை
ஒவ்வொரு பிறந்தநாளிலும்
திரும்பிப்பார்க்கிறேன்....
அழுது சென்ற முதல் நாள் பள்ளி
ஆராவார வகுப்பறை கல்வி
மறக்க முடியாத தோழிகள் கூட்டம்
தினசரி நடக்கும் உணவு பரிமாற்றம்
திருமணம் என்னும் புதுமண வாழ்வு
குழந்தை பெருகையில் தாய்மையின் உணர்வு
நிதம் கண்ட
உறவுகள்
பல பல நினைவுகள்
மறக்காது இந்த
மரணப்படுக்கையில்
மீண்டும் ஒரு முறை திரும்பிப்பார்க்கிறேன் ...
No comments:
Post a Comment