அலைகழிக்க
அடிவாங்க
அறவனைக்க
ஆறுதல் சொல்ல
உறவுகள் பல உலகினில் இருந்தும்
நேற்றை சுகமாக்க
இன்றை அழகாக்க
நாளை நமதாக்க
நம்மை அடித்து
நம்மையே பிடித்து அழும் குட்டித்
தங்கைகள்
வீட்டில் இருந்தால்
எதுவும் இங்கு சுகம் தருமே...
ஒவ்வொரு அக்காவிடம்
உணரலாம் தாய்மையின் உறவை
ஒவ்வொரு அண்ணனிடமும்
உணரலாம் தந்தையின் உறவை
யார் அறிவார் தெரியவில்லை
இதன் சுகம் ஒன்றும் புதிதில்லை
ஓடிபோகத் தேவையில்லை
கோடி சுகம் தங்கை அடித்தால்
அழுவதற்க்கு இனி அவசியமில்லை
அண்ணனின் ஆறுதல் என்றும் இருந்தால்
சங்கடம் மறக்கிறேன்
சகோதரன் மடியினில்
சந்தோஷப் படுகிறேன்
சகோதரி ஆனதில்
- சௌந்தர்யா -

No comments:
Post a Comment