Thursday, 10 July 2014















                               

முன்னும் பின்னும் ஓடி வரும் – மழலை போல்
தவழ்ந்து தவழ்ந்து விளையாடும்

அல்லிக்கொஞ்ச முடியாது – இதன்
அழகிற்கு ஈடு கிடையாது

அலையாய் நம்மை அடித்துப்போகும்
ஆழியாய் நம்மை இழுத்தும் போகும்

அதிசயமென சொல்ல முடியாது – இதை
இரசிக்காதவரே ஊரில் கிடையாது

பலவகை மீன்களை வாழவைக்கும்
கப்பலை தன்மேலே ஓடவைக்கும்
கொஞ்சம் காற்று அடித்தாலும்
நம்மையே அதற்கு இறையாக்கும்

என்றும் இது ஒரு
ஆபத்தான திடல் – அனைவரையும்
இரசிக்க வைக்கும் கடல் ! ! ! !


            .... சௌந்தர்யா .... 

No comments:

Post a Comment