.
.
.
கதை எழுத ஆசைதான்
நண்பனுக்கு
கவிதை எழுத ஆசைதான்
இசையமைக்க ஆசைதான்
நண்பனுக்கு
இமையாக ஆசைதான்
தினம் தொடர ஆசைதான்
நண்பனுக்கு
துணையாக ஆசைதான்
உறவோடு இருக்க ஆசைதான்
நண்பனுக்கு
உயிரைவிட ஆசைதான்..
வாழ்வில்
உனக்கொரு வலி வந்தாலும்
எனக்கே அது வலித்திடட்டும்
மனதில்
உனக்கொரு சிதைவென்றாலும்
எனக்கே அது
சிதைவுறட்டும்
உலகில்
உனக்கொரு தவிப்பென்றாலும்
என்னையே அது வதைத்திடட்டும்
தாயாக ஆசை
தாங்கிக்கொள்ள ஆசை
நண்பனுக்காக
எதையும் உலகில்..
இனியொரு பிறவி பிறக்க ஆசை
நல்ல நண்பனுக்காக !!!
--- சௌந்தர்யா ---

No comments:
Post a Comment