என்ன சொல்லி விழுகிறது மழைத்துளி
.
.
.
கானி நிலம்
காய்ந்து கிடக்கிறது
அதன் குளிர்ச்சிக்கு விழுகிறதோ !!!
வளரும் செடிகள்
ஏங்கிக் கேட்கிறது
அதன் வளர்ச்சிக்கு விழுகிறதோ !!!
விவசாயிகள் கண்கள்
வாடித் துடிக்கிறது
அவர்கள் மகிழ்ச்சிக்கு விழுகிறதோ !!!
மலர்கள் தொட்டாட விழுகிறதோ
கடலில் முத்தாட விழுகிறதோ...
விளைச்சலுக்கு விழுகிறதோ – நம்
மனஉலைச்சலுக்கு விழுகிறதோ...
இல்லை
மண்ணின் மேல் கொண்ட காதலோ
மரங்கள் மன்றாடி கேட்டதாலோ
என்ன சொல்லி விழுகிறது மழைத்துளி
எங்கள்
உள்ளம் நனைய வைக்கிறதே அந்த சிறுதுளி ....
--- சௌந்தர்யா ---
Nice Poem!:-)
ReplyDeleteThanks da..
ReplyDelete