Wednesday, 30 July 2014

இதயத்தில் சுமையொன்று
இடரிதினம் கொல்கிறது
இதுதானோ வலியென்று
இளமைமனம் அழுகிறது

துன்பத்தை ஏற்காவிடில்
இன்பம் அது தெரியாது
பிரிவொன்று காணாவிடில்
உறவின் அருமை புரியாது

உன் காயங்களின் ஆழங்கள்
முழுதாகப் புரிகிறது
உன் கண்ணீரின் ஈரங்கள்
என் நெஞ்சை சுடுகிறது

ஆசை பாசம் காதல் போல
கோபம் கொஞ்சல் நட்பு போல
பிரிவும் கூட இப்படித்தான்
வாழ்க்கையில் இருக்கும் ஒரு‘படி’தான்


நீ தாங்காத சோகமில்லை
உன்னால் தாங்கமுடியாத சோகமும் இல்லை
மேகம் போலதான் சோகங்களும்
நிலைத்து என்றும் நிற்காது !!

அழுகை என்பது புனிதமாகுது
உனக்காய் நான் அழுகையிலே
என் பெண்மை என்பதும் பெருமிதமடையுது
உன் கண்ணீரை துடைக்கும் வேலையிலே !!

சற்று கூட விழகமுடியவில்லை
ஒவ்வொரு நொடியும் உன் நினைவின் அலை
நித்திரை கூட இனித்தேவையில்லை
உன் சோகம் முடிந்து நீ சுகம் பெரும் வரை

கஷ்டம் என் தோழிக்கே என்றாலும் – இறைவா
அதன் காயங்களை எனக்கே பிரித்துக்கொடு

வருத்தங்கள் என் தோழிக்கே என்றாலும் – இறைவா
அதன் வலிகளை எனக்கே பிரித்துக்கொடு

சோகங்கள் என் தோழிக்கே என்றாலும் - இறைவா
அதன் வேதனையை எனக்கே பிரித்துக்கொடு

உண்மையான உறவுகளுக்கு
பிரிவுகளெல்லாம் பிரிவல்ல
காற்றை போல சுழன்றுவரும்
வாழ்க்கை முடியும் வரை தொடர்ந்துவரும்


உன் பாரங்கள் எல்லாம் தீரும் வரை
என் பாதங்கள் உனைவிட்டு நகராது
உன் காயங்கள் எல்லாம் ஆரும் வரை
என் கவிதைகள் கூட புன்னகைக்காது


அமைதியான பயணம் இது
அழுகையான தருணம் இது
இன்றே இதை ஏற்றுவிடு
மீண்டும் ஒருமுறை வாராது


பயங்கள் எல்லாம் பயந்திடட்டும்
கொஞ்சம் சிரிப்புடன் உலகைப்பார்
காயங்கள் எல்லாம் காயப்படட்டும்
கொஞ்சம் கண்ணீர் துடைத்து விழித்துப்பார்

உன் ஒவ்வொரு துளி கண்ணீரும்
என் உதிரமாய் இங்கு வழிகிறது
போதும் அழகே நிருத்திவிடு
என் உயிர் இறக்கப்போகிறது.


                --சௌந்தர்யா--

Sunday, 27 July 2014

நினைவில் மட்டும் அல்ல

என்

நிழலாகவும் தொடர்பவள்

நீ ................... 

Saturday, 26 July 2014




அடக்க முடியா அழுகை

      மழை























ஆடல் தோற்றுப்போனது
பெண் கூந்தல் அசைவிற்க்கு
பாடல் தோற்றுப்போனது
பெண்ணின் புன்னகைக்கு
வார்த்தை அற்று போனது
பெண் அவளின் பார்வைக்கு
அவள்
பேச்சை கேட்கவே
என் உயிர் அது ஓடுது
அவள் மூச்சுப்பட்டாலே
சிறு மொட்டும் மலருது

அழகானது காகிதமும்
பெண்ணை பற்றி எழுதிவைத்தால்
இதமாகுது இம்சைகளும்
பெண்ணே தினம் தாங்கிப்பிடித்தால்

அடடா
அலையும் கரைசேர மறுக்கிறது
பெண்ணின் பாதம் தொடுகையிலே
ஐய்யோ
இந்தக் கவிதையும் வெட்கப்படுகிறது

பெண்ணை பற்றி எழுதையிலே..

           சௌந்தர்யா

Thursday, 24 July 2014

வேண்டாமே வரதட்சனை ..


ஜாதகப் பொருத்தம் பார்த்தார்கள்
ஜாதி மதம் பார்த்தார்கள்
நல்ல நாள் தேர்ந்தெடுத்தார்கள்
நாள் கிழமை பார்த்தார்கள்
காசு பணம் கொட்டி
என்னை கட்டியும் கொடுத்தார்கள்
இப்பொழுதே புரிகிறது
வரதட்சனை என்னோடு வரவில்லை
வரதட்சனையோடு ஓர் ஆளாய் தான்  நான் வந்தேன் என்று !!!!

                  --சௌந்தர்யா--
அழகானது அன்பு
ஆபத்தானது பிரிவு
இயல்பானது ஆசை
ஈர்ப்பது இன்னிசை
உயர்வானது படிப்பு
உன்னதமானது நட்பு
செய்யக்கூடாதது நம்பிக்கை துரோகம்
செய்யவேண்டியது ஆபத்தில் உதவி
மிகவும் தேவை பனிவு
மிரட்ட தேவை துணிவு
வாழத்தேவை உணவு
வாழ்க்கைக்கு தேவை நல்ல மனது
சேர்ந்தே இருப்பது இமையும் விழியும்
சேரத்துடிப்பது வயதும் மனதும்
அடித்துவாழ்வது அலையும் கறையும்
அனைத்துவாழ்வது கடலும் அலையும்
நிரந்தரமானது நல்ல உள்ளம்
நிரந்தரமில்லாதது செல்வம்
மறைக்கக்கூடாதது உண்மை
மறக்கக்கூடாதது நன்றி
மறக்கமுடியாதது காதல்.

 --சௌந்தர்யா--





Tuesday, 22 July 2014

விரும்புகிறேன் தனிமையை
.
.
.
 நான் என்ற வீட்டுக்குள்
நானாகி போகின்றேன்

சண்டைகள் இருக்காது – இங்கு
சமாதானங்கள் இருக்காது

எதிர்பார்ப்பு இருக்காது – எந்த ஒரு
ஏமாற்றங்களும் இருக்காது

வலிகள் இருக்காது – அங்கு
வேதைனையும் வாராது..

அன்பை அலைகழிக்க ஆள் இருக்காது
அனைப்பை தூக்கி  எரிய ஆள் இருக்காது

 நூரு முறையேனும் தூக்கி எரியுங்கள்
துக்கமில்லை
தனிமையை விரும்புபவள் நான்
ஆயிரம் முறையேனும் அலட்சியபடுத்துங்கள்
 பெரிதில்லை
தனிமையை  விரும்புபவள் நான்
கோடி முறையேனும் கீழ்த்தனமாய் பேசுங்கள்
வலியில்லை
தனிமையை விரும்புபவள் நான்

சிறு புன்னகை கூட பொய்யாக
உதிர்க்காமல் வாழ்ந்து பார்த்தேன்
தெரியவில்லை அப்போது
உண்மை காதல் எப்போதும்
ஜெயிக்காது என்று!!

பேசவில்லை யாருடனும்
விரும்புகிறேன் தனிமையை
பழகவில்லை யாருடனும்
விரும்புகிறேன் தனிமையை


பேசி பேசித் தீர்ப்பவள் நான்
இன்று
வார்த்தை தேடி அலைகின்றேன்
காதலித்தே கரைபவள் நான்
இன்று
கண்ணீரில் தள்ளாடுகிறேன்..

கெஞ்சி கெஞ்சி வாழவேண்டாம்
கெஞ்சல்களே இனி இருக்காது

வலிகளுக்கு  ஆறுதல் என் தனிமையே
கவலையை தீர்ப்பது இந்த கவிதையே!
         
           சௌந்தர்யா







Monday, 21 July 2014

பருவகால மாற்றம் போல் அவன் அன்பு
பொழியும்  அல்லது எரிக்கும்
இரண்டிலும் வாழத்தெரிந்தால் மட்டுமே

அவன் அன்பு நிலைக்கும்!
அவள் என்னை வெறுத்தாலும் ஆனந்தமே
ஏதோ ஒரு உறவுமுறையில் அவள் என்னை
வைத்திருப்பாள்
தொட்டு தூக்கினால் தோழி
தூக்கி எரிந்தால் எதிரி
இரண்டுமே பழக்கபட்டதுதான்

இரவு பகல் போல !
உறக்கம் இல்லா இரவுகள்
.
.
.
வழியில்லை
அழிவில்லை
வலிகளுக்கு முடிவில்லை!

சிரிப்பில்லை
பிடிப்பில்லை
சிதைவுகளுக்கு சரிவில்லை!

தடையில்லை
தவமில்லை
தாங்கிபிடிக்க ஆளில்லை!

இறக்கமில்லை
இறப்புமில்லை
இரவுகளிளும் உறக்கமில்லை

வேகமில்லை
வேடமில்லை
வேதனைகள் குறையவில்லை
அர்த்தமில்லை
அச்சமில்லை
ஆதரவுக்கு யாருமில்லை!

அன்பையும் கொச்சை படுத்தும் உறவுகள்
அதனால் உறக்கம் இல்லா இரவுகள் ....
என்றும் இது ஒரு விடுகதையா??
மாற்றம் இல்லாத தொடர்கதையா??




Friday, 18 July 2014

உருவம் இல்லையாம் உண்மை உணர்வுகளுக்கு
இருந்தும் கண்டேன்-அவள் சற்று பிரிகையில்.,
என் காதலை – கண்ணீர் 
என்னும் உருவத்தில்..


Thursday, 17 July 2014

















முத்திப்போனால் முதியோர் இல்லமா...
.
.
.
வக்கீல் பேசவில்லை
மருத்துவர் பார்க்கவில்லை
ஆசிரியர் வழி நடத்தவில்லை
இருந்தாலும் கண்டிக்க யாருமில்லை
இது மூன்றும் என் பிள்ளை..

வாதாடி பேசியது யாருக்கோ
சிகிச்சை பார்த்தது யாருக்கோ
பாடம் நடத்தியது யாருக்கோ
முதியோர் இல்லம் மட்டும் இறுதியில் எங்களுக்கோ!

சுடுகிறது நெருப்பல்ல
வதைக்கிறது தவிப்பல்ல
வலிக்கிறது உடல்அல்ல

சுட்டது வார்த்தை
வதைத்தது வறுமை
வலிக்கிறது முதுமை..


--சௌந்தர்யா--

Monday, 14 July 2014

இருட்டுக்குள் ஒரு கொலை
.
.
.
குற்றம் செய்தவர்களுக்கு விடுதலை
எனக்கு ஏன் தண்டனை

தரிக்க வைப்பது சரியென்றால்
தரித்தது எப்படி என் பிழையாகும்..

உன் இரத்தத்தில் உருவான கரு தானே நானும்
உயிர் பிரித்து பிணமாக ஆக்கலாமோ நீயும்

கொலையாளிக்கு விடுதலையாம்
எனக்கே மரண தண்டனையாம் ...

கழுத்தறுத்துகொல்வது மட்டும் கொலை என்று ஆகாது
கருக்கலைத்து கொல்வதுவும் கொலையில்லாமல் போகாது.

-          சௌந்தர்யா -