ஆனந்தி
ஓர் நாள் உட்கார்ந்து கொண்டிருந்தேன்
ஊரணிக்கு பக்கத்தில்
ஆனந்தி ஓடி வந்தா
மூச்சிறைக்க தளர்ந்து நின்னா
என்னமோ ஏதோன்னு
தூரத்தில் எழுந்து நின்னே
பட்டுனு தண்ணிக்குள்ள
படபடப்போட பாய்ந்து விழுந்தா
மொத்தமாய் தண்ணீரெல்லாம்
முட்டையாய் மேலே எழ
திகைத்து போய் கூச்சலிட்டேன்
அவ உயிர் பிழைக்க வேண்டிகிட்டே
வேகாத வெயிலுல
மண்ணெல்லாம் காயுதுன்னு
பாவிமக கண்ணெல்லாம் கண்ணீரோடு
தண்ணியில விழுந்தது ஏன்?
மூனுபுல்ல பெத்தெடுத்து
முப்பதுவயசு ஆனபோதும்
முகமெல்லாம் மகழ்ச்சியற்று
முழுகிச்சாக நினச்சது ஏன்?
ஊரே எழுப்பி உரக்க கேட்டும்
பதில் இல்ல இதுவரைக்கும்..
முதல் பிள்ள அம்மான்னு கறையோரம் கத்தினிக்க
அடுத்ததோ தூக்கத்துல தொலஞ்சவல தேடினிக்க
மூனாவதோ மூலையில எவரும் சீண்டாது நின்றிருக்க
பாதகத்தி மூனையும் பெத்துவிட்டு மூச்சவிட
நாலாவதும் வயுத்துல பொன்னுன்னு தெரிஞ்சதும்
உயிரவிட
துனிஞ்சது ஏனம்மா??
இங்கு நீ
பிறக்காத பிள்ளைக்கு போய் சேர்ந்து தூங்கிட்ட
பொறந்த மூனு பொன்னும் தூங்காம அழுகுதம்மா –
இன்று
அதுக்கு தாலாட்டு பாட இல்லையே ஓர் அம்மா
.......
“சௌந்தர்யா”
No comments:
Post a Comment