தனித்து வாழ்வது
பெறிதல்ல – ஆனால்
தனிக்கப் படுவது
மிகக்கொடிது
ஒதுக்கி விடுவது
பெறிதல்ல – ஆனால்
ஒதுக்கப்படுவது
மிகக்கொடிது
விலகிப்போவது பெறிதல்ல –
ஆனால்
விலக்கப்படுவது
மிகக்கொடிது
குறைகாண்பது பெறிதல்ல –ஆனால்
குறைசாட்டப் படுவது
மிகக்கொடிது
உன்னால் ஏற்று கொள்ள
முடியா ஒன்றை
பிறர் ஏற்பார் என்று நினைப்பதே தவறு
சகித்து கொள்ள பழகிகொள்
சங்கடங்கல் விலகிவிடும்
பிறர் நிலையில் இருந்து
யோசித்தால்
பொறுமை தானாய்
தங்கிவிடும்
ஒற்றை ரூபாய் சில்லறைக்கும்
இரட்டை முகம் இங்கு
உண்டு
ஒரே நிலையில்
வாழ்ந்திருந்து
உறங்கிபோனவர் எவறும்
இல்லை
ஒவ்வொரு நாளும்
பிறந்தநாளாய்
எண்ணி வாழ்வதில் தவறும்
இல்லை ....
விதியே என்று
தொடர்ந்தால் அது செயற்க்கை
விழாக்காலமாய் வாழ்வதே
வாழ்க்கை
No comments:
Post a Comment