Monday, 30 June 2014

தஞ்சம் புக வழியில்லை ....
என்றும்
உண்மை உணர்வுகளுக்கு
.
.
.

கண்ணீரே முதல் பிள்ளை .......

Sunday, 29 June 2014

அடிக்கவில்லை ஆனாலும் வலிக்கிறது
.
.
.

அவளது மௌனம் ....

Friday, 27 June 2014

விதைவைக்கும் மறுவாழ்வு
.
.

தெரு ஓரப்பூக்கடை கொடுத்தது 
கர்பம் தரிக்க வழியில்லையாம்
எச்சில் இலை போல்
தூக்கி எரிந்து விட்டான் கணவன்
.
.
சாதாரணப் பெண்ணாய் பார்த்த உலகம்
இப்போது மளடியாய் பாரக்கிறது.....


தாயாய் ஆகமுடியாத 
சோகத்தை விட
                                     தாரம் என்ற ஸ்தானத்தை

                                          இழந்ததிலே வலி அதிகம்                                                             வதைக்கிறது......

Thursday, 26 June 2014

குறைந்த காலம் தான் – ஆனாலும்
ஈடில்லா ஆனந்தம்
இவை இரண்டிற்க்கு மட்டுமே

தாயின் கருவறையும் 

தந்தையின் ஸ்பரிசமும் 
ரீங்காரமிட்டு சுத்திவரும் – நம்மை
உறங்கும் போதும் சினுங்க வைக்கும்
இரவெல்லாம் வந்து போகும்.....

இனபேதம் பார்க்காது
இளமை முதுமை அரியாது
குத்தி குத்தி நம் இரத்தம் எடுக்கும்
இரத்தம் கக்கியே உயிரை துறக்கும்...


                                        -கொசு - 
தேகங்கள் நீ அன்றி
தேய்ந்தே தான் போகிறது
தேதிகளும் நீயன்றி
நகராது சுடுகிறது


மணம் வீசும் மலரே நீ
என் வசமாவது எப்போது
பிரிவில் தான் சுகமென்றால்
சொல்லிவிடு இப்போது ...

மழைத்துளி தொடத்  துடிக்கிறது – நீ

மண்ணில் வந்து கால்பதி – என்

இருவிழி உனைகான அலைகிறது என்றும்


காதலுக்கு இல்லை காலாவதி..........

Monday, 23 June 2014

சிறு பிள்ளையாய் 
எவறையும் மாற்றி
.
.
சிரிக்க வைப்பதற்க்கே
பெயர் போனது........




பேசாமல் இருப்பதாய்
நினைத்துக்கொண்டிருக்கிறாள்

அவள் விழி

ஆயிரம் மொழி பேசியதை அறியாமல் .......

Saturday, 21 June 2014



பாவம் செய்தவைகளாகவே
கருதப்படுகிறது
.
.
.

உலகில் – அவள்

பார்க்காத ஒவ்வொன்றும்..


Friday, 20 June 2014

மகிழ்வூட்டும்
மனம்மயக்கும்
திடமாக்கும்
புத்துணர்வு கொடுக்கும்
மருந்தல்ல – ஆனாலும் இதை
அருந்த
விரும்பாதவர் எவறும் அல்ல
.
.
.
காலை நேர தேநீர்



Monday, 16 June 2014

சிதையப்படுவேன் எனத் தெரிந்தும்
வண்ணம் கொண்டு
வடிக்கிறார்கள் என்னை.
.
.




             --  வாசலில்  கோலம்  --
காசு கொடுத்து வாங்க முடியாது
இது விற்பனையிலே கிடையாது
வேலை என்று மறுக்கவும் முடியாது
வேண்டாம் என்று ஒதுக்கவும் முடியாது
எப்படி வந்தது  எவருக்கும் தெரியாது
 இதை
கொடுக்காதவரும்
வாங்காதவரும்
மண்ணில் யாருமே கிடையாது
.
.
.
உருவம் இல்லாததும்
உலகையே அழ்வதும்
உண்மையான அன்பு மட்டுமே........


நொடியில் நினைக்க முடியும் – மறப்பது கடினம்
 அன்பை கொடுக்க  முடியும் – எடுப்பது கடினம்
 உறவை துழைப்பது சுலபம் – தேடுதல் கடினம்
 பணத்தை செலவழிப்பது சுலபம் – சேர்ப்பது கடினம்
 காயப்படுத்தல் எளிது – காயங்கள் கடினம்.......
என்றும் மனிதனுக்கு

 மாறாத குணமும்

 மறையாத வலியும் ...

Sunday, 8 June 2014

வலிப்பது இதயம்- ஆனால்
அழுவதோ விழிகள்

கண்களில் கண்ணீர் – அதை
துடைப்பதோ கைகள்

நடந்தன கால்கள் – வேர்வையில்
நனைந்தது தேகம்

வேறு வேறு தான்
ஆனால் இவைகளுக்குள் இல்லை வேறுபாடுகள்.......

                                --சௌந்தர்யா--





Saturday, 7 June 2014

தனித்து வாழ்வது பெறிதல்ல – ஆனால்
தனிக்கப் படுவது மிகக்கொடிது 

ஒதுக்கி விடுவது பெறிதல்ல – ஆனால்
ஒதுக்கப்படுவது மிகக்கொடிது 

விலகிப்போவது பெறிதல்ல – ஆனால்
விலக்கப்படுவது மிகக்கொடிது 

குறைகாண்பது பெறிதல்ல –ஆனால்
குறைசாட்டப் படுவது மிகக்கொடிது 

உன்னால் ஏற்று கொள்ள முடியா ஒன்றை
பிறர் ஏற்பார் என்று  நினைப்பதே தவறு

சகித்து கொள்ள பழகிகொள்
சங்கடங்கல் விலகிவிடும்
பிறர் நிலையில் இருந்து யோசித்தால்
பொறுமை தானாய் தங்கிவிடும்

ஒற்றை ரூபாய் சில்லறைக்கும்
இரட்டை முகம் இங்கு உண்டு
ஒரே நிலையில் வாழ்ந்திருந்து
உறங்கிபோனவர் எவறும் இல்லை
ஒவ்வொரு நாளும் பிறந்தநாளாய்
எண்ணி வாழ்வதில் தவறும் இல்லை ....

விதியே என்று தொடர்ந்தால் அது செயற்க்கை
விழாக்காலமாய் வாழ்வதே வாழ்க்கை   


தனித்து வாழ்வது பெறிதல்ல – ஆனால்
தனிக்கப் படுவது மிகக்கொடிது J

ஒதுக்கி விடுவது பெறிதல்ல – ஆனால்
ஒதுக்கப்படுவது மிகக்கொடிது J

விலகிப்போவது பெறிதல்ல – ஆனால்
விலக்கப்படுவது மிகக்கொடிது J

குறைகாண்பது பெறிதல்ல –ஆனால்
குறைசாட்டப் படுவது மிகக்கொடிது J

உன்னால் ஏற்று கொள்ள முடியா ஒன்றை
பிறர் ஏற்பார் என்று  நினைப்பதே தவறு

சகித்து கொள்ள பழகிகொள்
சங்கடங்கல் விலகிவிடும்
பிறர் நிலையில் இருந்து யோசித்தால்
பொறுமை தானாய் தங்கிவிடும்

ஒற்றை ரூபாய் சில்லறைக்கும்
இரட்டை முகம் இங்கு உண்டு
ஒரே நிலையில் வாழ்ந்திருந்து
உறங்கிபோனவர் எவறும் இல்லை
ஒவ்வொரு நாளும் பிறந்தநாளாய்
எண்ணி வாழ்வதில் தவறும் இல்லை ....

விதியே என்று தொடர்ந்தால் அது செயற்க்கை
விழாக்காலமாய் வாழ்வதே வாழ்க்கை   





இது துடிக்கும் வரை தான்
நம் வாழ்க்கை 
.
.

-இதயம்-

Friday, 6 June 2014

நீயும் – நானும்
.
.
என் இதயம் – உன் நினைவு
உடலாக நான் – உயிராக நீ
விழியாக நான் – இமையாக நீ
வார்த்தைகள் நான் – கவிதைகள் நீ
மரமாக நான் – தளிராக நீ
                                      ஆகாயம் நான் – மேகங்களாய்  நீ

நீ இல்லாமல் போனால் என்னை இரசிக்க முடியாது
நான் இல்லாமல் போனால் உன்னால் வசிக்க முடியாது J
என்றும் சேர்ந்தே தொடருவோம் “நீயும் நானும்” ........ ..


ஆயிரம் சர்ச்சைகள்  கடந்தும்
அன்பு மாறாமல் எது வாழ்கிறதோ
அதுவே
. ..

காதல் 
கடிகார முட்களை போல்
ஊர் ஊராய் சுற்றி வந்தால்
அனைவரும் பார்க்கிறார்கள்
அவசரத்தில் மட்டும்
ஒரு வாய் சோற்றிற்க்கே
பணம் வேண்டிக் காத்திருக்கும்  


     --- பிச்சைக்காரி ---

Tuesday, 3 June 2014




சிற்ப்பிக்கு பெருமை 
உன்னை சிலை வடித்தால்
.
.


கற்பனைக்கு பெருமை உனக்கு கவி படைத்தால்....