Saturday, 8 November 2014





















பேசாமல் போகின்றாய்
மௌனத்தின் வலி அறிந்தேன்
பாராமல் ஏன் சென்றாய்
பார்க்கும் விழியை வெறுக்கின்றேன்

கிடைக்காதா மறுபடியும்
உன்னோடு உறவிங்கு
கிடைக்காதா மறுபடியும்
உன்போன்ற உறவெங்கு

கோபங்கள் உனக்கென்றால்
சத்தம் போட்டு திட்டிவிடு
கஷ்டங்கள் உனக்கென்றால்
என்னிடமே நீ கொட்டிவிடு

தூரத்தின் சுமை அறிந்தேன்
நீ விலகி செல்லும்போதே
பாரத்தில் நான் கறைந்தேன்
நீ என்னை வெறுக்கும்போதே

தேடிக்கிடைக்கும் சுகம்தன்னை
தேடாமல் தந்தவன் நீ
ஒதுக்கிவைக்கும்  சுமைதன்னை
கேட்காமல் ஏன்தந்தாய் நீ

சொந்தத்தின் அருமைதனை
உன் அருகாமை தந்ததன்று
சொர்க்கத்தின் வாசல்தனை
உன் அறவணைப்பே சொன்னதுண்டு

எத்திசைகள் இருந்தென்ன
உன் திசையை நான் அறியேன்
எத்தனை பேர் இருந்தென்ன
உன் அசைவை நான் மறவேன்

காலங்கள் ஓடினாலும்
வேண்டிடுவேன் உன் அன்பிற்க்கு
காயங்கள் கூடினாலும்
காத்திருப்பேன் உன் மடிக்கு !!

                     ---சௌந்தர்யா---



No comments:

Post a Comment