என் உயிரே நியன்றி
ஏதும் இங்கு பெரிதில்லை
என் உலகம் நீ என்பேன்
வேறெதுவும் அடங்கவில்லை
உனை நினைக்கும் நிமடத்தில்
எனை மறந்து நான் போவேன்
உனை நினைக்கா நேரத்தில்
எப்படி இங்கு நான் வாழ்வேன்
விளக்கமுடியா அன்பு இது
விலகமுடியா நட்பு இது
விடியலன்றி போனாலும்- உன்
விழிகளே எனக்கு ஒளியாகும்
ஒட்டி பிறக்கவில்லை
இருந்தும்
உனை பிரிந்து
இருக்க முடியவில்லை ;
சங்கீதங்கள் வேண்டாம் எனக்கு
உன் சிரிப்பொன்றே கீதமாகும்
சொந்தம் பல வேண்டாம் எனக்கு
உன் உறவொன்றே வேதமாகும்
கேட்காமல் வந்த வரமே
இங்கு
கிறுக்கியதெல்லாம் உனக்கு
பகல் நேர நிலவே
உன்மேல்
பைத்தியமடி எனக்கு !
உன்னோடு என் வாழ்வு
எனக்கு கிடைத்த மோட்சமடி
நான் வாழும் நல்வாழ்வு
நீ போட்ட பிச்சையடி
நீ துக்கம் என சொன்னால்
தூக்கங்கள் தூரமாகும்
அழகுரதி நீ அழுதால்
அனைத்தும் ஒரு பாரமாகும்
கண்ணீரை சிந்தாதே
கனமாகுது இதயங்கள்
கவலையென வருந்தாதே
மாற்றிவிடும் வரும் காலங்கள்
தூரமாக நீ போனால்
துயரம் அது - நான்
தூக்கிபோட்ட கவிதைக்கு
தூது இது !
தவறுகள் ஒன்றல்ல
ஓராயிரம் செய்ததுண்டு
மன்னிப்பு ஆயிரம் அல்ல
பல்லாயிரம் கொடுத்ததுண்டு
காதல் மட்டும் போதும்
அன்பே
காயங்கள் வேண்டாம்
பிரியங்கள் மட்டும் போதும்
அழகே
பிரிய வேண்டாம் ..
வாழும் போதே சொர்க்கங்கள்
உன் உறவில் இன்று கிடைத்ததம்மா
பத்து ஜென்ம சந்தோஷத்தை
உன் ஓர் உயிரே எனக்கு கொடுத்ததம்மா ..
--சௌந்தர்யா--
No comments:
Post a Comment