உலகில் அடிமைகள் யாரும் இல்லை
இருந்தும்
எதற்க்கோ அடிமையாகிப்போகாதவரும் இல்லை
அப்படித்தான்
கவிதைக்கு அடிமையாகிப்போனேன் நான் !!!
சிந்தித்திருக்கலாம் சிலர்
எப்படி எழுதுகிறாள் என்று
சிந்தித்திருக்கலாம் சிலர்
எழுதுவதே என் வேலையோ என்று
வேண்டாமென்று ஒதுக்குவதில்லை
வேண்டுமென்றே யோசிப்பதில்லை
தானாய் வந்து விழுகிறது – எழுதாது
போனால் மனம் அழுகிறது
புன்னகையை எழுதிவைத்தேன்
பாராட்டுக்கள் வந்த வண்ணம்
அழுகையை எழுதிவைத்தேன்
ஆறுதல் தந்ததுள்ளம்
வண்ணங்கள் கொடுக்கும் அழகை
வார்த்தையிலே கொடுக்க நினைத்தேன்
வானவில் தரும் நிறத்தை
எழுத்துக்குள் அடக்க நினைத்தேன்
எழுத முற்படும்போதெல்லாம்
தோன்றாத அற்புதக்கவிதை
எதார்த்தமாய் கொட்டிப்போகிறது
என்றாவது ஒரு நாள் !
எழுதுங்கள் கவிதைகளை
மனம் சிரிக்கும் போதெல்லாம்
எழுதுங்கள் கவிதைகளை
மனம் அழுகும் போதெல்லாம்
எழுதுங்கள் கவிதைகளை
உறவு வரும் போதெல்லாம்
எழுதுங்கள் கவிதைகளை
உனை ஒதுக்கும் போதெல்லாம்
சந்தோஷத்தில் தானாய் கிடைக்கும்
சில்லென்ற சிரிப்பின்அலை
அழுகையில் மட்டுமே பிறக்கும்
மிகச்சிறந்த
கவிதைமழை ! ! !
--- சௌந்தர்யா ---
No comments:
Post a Comment