சிந்தையிலே பல நினைவு
சிதரி சிதரி தெரித்துப்போக
சில்லென்ற ஒரு கனவு
நெஞ்சில் நீங்காமல் நிறைந்து போக..
வண்ணங்கள் இல்லாமல் வானவில் இருந்ததுண்டா
எண்ணங்கள் இல்லாமல் ஏக்கங்கள் வருவதுண்டா
பட்டபடிப்பு படித்துவிட்டேன்
பட்டதாரி ஆகிவிட்டேன்
எட்டிபிடிக்க ஏதுமில்லை
எழாமல் அமர்ந்துவிட்டேன்
சாலையோர மரங்கள் கூட
நண்பன் ஆகிப்போனது இங்கு
காலை நேர தேனீர் கூட
கசப்பாகத் தெரியுது இங்கு
கலக்கங்கள் பெரிதில்லை எங்கும்
கட்டுப்பாடே பெரியதொல்லை
விளக்கங்கள் ஏதுமில்லை – பொங்கும்
விமர்சனங்கள் மட்டும் குறையவில்லை
வாழ்க்கைப்பாதை புதிதானது – அதில்
வலிகளே மிகக்கொடிதானது
வார்த்தையெல்லாம் வலிமையானது – அதை
வீசியெரிந்தால் வேதனையானது
கண்ணீர் கொண்ட உள்ளம் ஒன்று
கலக்கத்தில் தள்ளாட
கவலை கண்ட பின்னும் அது
ஒதுங்காமல் கதறியழ
வேடம் இல்லை நாட்கள் ஒன்றும்
வேலைமுடிந்து வீடுசெல்ல
கீதம் இல்லை ஏதும் இங்கு
கேட்டுவிட்டு நகர்ந்துசெல்ல
சொல்லால் செத்துப்போன உள்ளத்திற்க்கு
சொந்தங்கள் போதுமா
வேரோடி போன காயத்திற்க்கு
மருந்துகள் வேண்டுமா
--- சௌந்தர்யா ---
No comments:
Post a Comment