கண்கள் நனைந்து கலங்கிட கண்டேன்
என்
கண்ணீரும் இங்கு கனத்திட கண்டேன்
அறிவுரை கேட்டு நிற்கவில்லை
ஆறுதல் தேடி ஓடிவந்தேன்
முன்னுரை தொட்டு தொடங்கவில்லை
முடிவுரை தேடி நிற்கின்றேன்
சரியா தவறா கேட்கவில்லை
சமாதானம் கேட்கின்றேன்
நல்லதா கெட்டதா கேட்கவில்லை
நல்லதோர் வார்த்தை கேட்கின்றேன்
என் பட்டபகல் பொழுதெல்லாம்
பட்டினியாய் இங்கு கழிகிறது
என் நட்ட நடு இரவுகூட
நகராமல் கொன்று வதைக்கிறது
படித்ததற்க்கான வேலையை
பார்க்கவில்லை நான்இங்கு
வெட்டியான வாழ்க்கையை
விரும்பவில்லை யாருமிங்கு
செய்யும் தொழிலே தெய்வம் என
சும்மா எழுதி வைத்தார்களோ
தகுந்த வேலை செய்யாதவன் மடையன் என
யார்சொல்லி தொலைத்தார்களோ
செத்துபோவென சொல்லிவிட்டால் தாயும்
யாருக்காக வாழ வேண்டும் நானும்
விரட்டிய உலகம் வியக்க வேண்டும்
சிரித்த உலகம் சிந்திக்க வேண்டும்
மிரட்டிய வலிகள் மிரள வேண்டும்
அதற்க்கு என்
சாதாரண கைகள் சாதிக்க வேண்டும்....
சொல்லி கொள்ளுங்கள் உறவுகளே
யாரையும் மதிக்காதவள் நானென
சொல்லி கொள்ளுங்கள் உறவுகளே
எதற்க்கும் அடங்காதவள் நானென
சொல்லி கொள்ளுங்கள் உறவுகளே
எதிர்த்துப்பேசுபவள் நானென
சொல்லி கொள்ளுங்கள் உறவுகளே
சொன்னதை கேட்காதவள் நானென
சொல்லி கொள்ளுங்கள் உறவுகளே
எதற்க்கும் உதவாதவள் நானென
நல்லபெயர் இருந்தால் தான்
தக்க வைக்க
வேண்டும்இங்கு
கெட்டபெயர் வாங்கிவிட்டால்
சொல்வதற்க்கு மிச்சம் ஏது இங்கு ???
சமாதான பேச்சுக்கள் தந்தால்
சங்கடம் இன்றி தோல் சாய்கிறேன்
சஞ்சலங்கள் தருவதென்றால்
சத்தம் இன்றி விலகி விடுகிறேன்..
தாயை அடித்து கொன்றுவிட்டு
மகளை கொஞ்சி என்ன பயன் ???
ஒவ்வொரு நாளை என்பதுமே
இன்றிலிருந்தே பிறக்கிறது
இன்றை முழுதாய் கொன்றுவிட்டால்
நாளைய தினமே இருக்காது...
வாழவிரும்புகிறேன் நான் இன்று மட்டும் !!!!!!
சௌந்தர்யா
No comments:
Post a Comment