Wednesday, 27 August 2014

வழக்கமாய் வரும் நிலா
வழிமாறிபோகுமா
உறக்கத்தில் வரும் கனா
எழுந்ததும் தொடருமா

எதிர்பார்ப்புகள் நடக்காது
ஏளனங்கள் குறையாது
எதார்த்தமாய் செய்தாலும்
எதிர்பேச்சு முடியாது

ஒவ்வொரு மனிதனுள்ளும்
ஒரு மிருகம் இருக்கிறதாம்
ஒவ்வொரு மனதினுள்ளும்
பல வலிகள் தொடர்கிறதாம்

போதும் என்று சொல்வதில்லை
உணவை தவிர ஒன்றையுமே
வேண்டாம் என்று சொல்வதில்லை
வருத்தம் தவிர ஒன்றையுமே

உலகில்
நிம்மதி ஆன வாழ்க்கை வாழ
ஊமை ஆக இருக்க வேண்டும்
சங்கடம் இல்லா வாழ்க்கை வாழ
செவிடகத்தான் பிறக்க வேண்டும்

சொல்வதையும்
கேட்பதையும்
இனி சொப்பனத்தில் தான் காண வேண்டும்

அழுகையும் நல்லதுதான்
அனுபவம் கிடைப்பதாலே
கவலையும் நல்லதுதான் - தினம்
கவிதைகள் பிறப்பதாலே .


                                                                --- சௌந்தர்யா ---

Saturday, 23 August 2014

சிந்தையிலே பல நினைவு
சிதரி சிதரி தெரித்துப்போக
சில்லென்ற ஒரு கனவு
நெஞ்சில் நீங்காமல் நிறைந்து போக..

வண்ணங்கள் இல்லாமல் வானவில் இருந்ததுண்டா
எண்ணங்கள் இல்லாமல் ஏக்கங்கள் வருவதுண்டா

பட்டபடிப்பு படித்துவிட்டேன்
பட்டதாரி ஆகிவிட்டேன்
எட்டிபிடிக்க ஏதுமில்லை
எழாமல் அமர்ந்துவிட்டேன்

சாலையோர மரங்கள் கூட
நண்பன் ஆகிப்போனது இங்கு
காலை நேர தேனீர் கூட
கசப்பாகத் தெரியுது இங்கு

கலக்கங்கள் பெரிதில்லை எங்கும்
கட்டுப்பாடே பெரியதொல்லை
விளக்கங்கள் ஏதுமில்லை – பொங்கும்
விமர்சனங்கள் மட்டும் குறையவில்லை

வாழ்க்கைப்பாதை புதிதானது – அதில்
வலிகளே மிகக்கொடிதானது
வார்த்தையெல்லாம் வலிமையானது – அதை
வீசியெரிந்தால் வேதனையானது

கண்ணீர் கொண்ட உள்ளம் ஒன்று
கலக்கத்தில் தள்ளாட
கவலை கண்ட பின்னும் அது
ஒதுங்காமல் கதறியழ

வேடம் இல்லை நாட்கள் ஒன்றும்
வேலைமுடிந்து வீடுசெல்ல
கீதம் இல்லை ஏதும் இங்கு
கேட்டுவிட்டு நகர்ந்துசெல்ல

சொல்லால் செத்துப்போன உள்ளத்திற்க்கு
சொந்தங்கள் போதுமா
வேரோடி போன காயத்திற்க்கு
மருந்துகள் வேண்டுமா

--- சௌந்தர்யா ---




Tuesday, 19 August 2014

கனிந்தொரு நாளில்
கடிந்தொரு வார்த்தை

கலங்கிய கண்ணில்
காயங்களின் சர்ச்சை

புரியவில்லை மனிதனின் மாற்றம்
தெரியவில்லை அப்பரிமாற்றம்

நீ தேடும் தேடல்கள்  நிஜமாகவில்லை
உன்னை தேடி வருவதெல்லம் பொய்யானதில்லை

சுடுகிறது நெஞ்சம்
நிழல் பட்ட பின்னும்
தேடுதே உள்ளம்
உறவு பொய்யென்று தெரிந்தும்

நீல வண்ணமேகங்கள் ஊர்ந்து போகுதொரு உலா
அதை கவியாய் எழுதி கானுகிறேன் நானும் கனா

எடுத்தெரியவில்லை ஏக்கங்கள் எனக்கு
எட்டாத நிலவுக்கு ஏணிப்படி எதற்க்கு


எதார்த்தமாக இருக்கவில்லை இங்கு
எதிர்ப்பார்ப்புகள் பெரிய தொல்லை
எண்ணிக்கை தெரியவில்லை எங்கும்
ஏக்கங்கள் நம்மை விடவில்லை

அந்திபகல் வேலையிலே
சூரியன் உதிக்கக்கண்டேன்
அத்துவான காட்டுக்குள்
சூராவளி அடிக்கக்கண்டேன்

மனம் இன்று சிரிக்கிறது
மழலை மொழி கேட்டாலே
மலர் கூட அழுகிறது அந்த
மயானக் கறையினிலே

அடித்தாலும் வலிக்கவில்லை
மழை அடிக்கும் வேலையிலே
அனைத்தாலும் சுகமில்லை
மனம் விரக்தி அடைந்தாலே..

ஆயுள் கைதி ஆனதனால்
தண்டனைகள் பெரிதில்லை
அலையில்லா கடலுக்கு
பேரலைகள் வருவதில்லை

புரலிகளே இருக்காது
உறவுகளை குறைத்தாலே
வலிகளே வாராது
வருவதை ஏற்றாலே

-- சௌந்தர்யா --


கண்கள் நனைந்து கலங்கிட கண்டேன்
என்
கண்ணீரும் இங்கு கனத்திட கண்டேன்

அறிவுரை கேட்டு நிற்கவில்லை
ஆறுதல் தேடி ஓடிவந்தேன்
முன்னுரை தொட்டு தொடங்கவில்லை
முடிவுரை தேடி நிற்கின்றேன்

சரியா தவறா கேட்கவில்லை
சமாதானம் கேட்கின்றேன்
நல்லதா கெட்டதா கேட்கவில்லை
நல்லதோர் வார்த்தை கேட்கின்றேன்

என் பட்டபகல் பொழுதெல்லாம்
பட்டினியாய் இங்கு கழிகிறது
என் நட்ட நடு இரவுகூட
நகராமல் கொன்று வதைக்கிறது

படித்ததற்க்கான வேலையை
பார்க்கவில்லை  நான்இங்கு
வெட்டியான வாழ்க்கையை
விரும்பவில்லை யாருமிங்கு
செய்யும் தொழிலே தெய்வம் என
சும்மா எழுதி வைத்தார்களோ
தகுந்த வேலை செய்யாதவன் மடையன் என
யார்சொல்லி தொலைத்தார்களோ

செத்துபோவென சொல்லிவிட்டால் தாயும்
யாருக்காக வாழ வேண்டும் நானும்

விரட்டிய உலகம் வியக்க வேண்டும்
சிரித்த உலகம் சிந்திக்க வேண்டும்
மிரட்டிய வலிகள் மிரள வேண்டும்
அதற்க்கு என்
சாதாரண கைகள் சாதிக்க வேண்டும்....

சொல்லி கொள்ளுங்கள் உறவுகளே
யாரையும் மதிக்காதவள் நானென
சொல்லி கொள்ளுங்கள் உறவுகளே
எதற்க்கும் அடங்காதவள் நானென
சொல்லி கொள்ளுங்கள் உறவுகளே
எதிர்த்துப்பேசுபவள் நானென
சொல்லி கொள்ளுங்கள் உறவுகளே
சொன்னதை கேட்காதவள் நானென
சொல்லி கொள்ளுங்கள் உறவுகளே
எதற்க்கும் உதவாதவள் நானென

நல்லபெயர் இருந்தால் தான்
தக்க வைக்க  வேண்டும்இங்கு
கெட்டபெயர் வாங்கிவிட்டால்
சொல்வதற்க்கு மிச்சம் ஏது இங்கு ???

சமாதான பேச்சுக்கள் தந்தால்
சங்கடம் இன்றி தோல் சாய்கிறேன்
சஞ்சலங்கள் தருவதென்றால்
சத்தம் இன்றி விலகி விடுகிறேன்..


தாயை அடித்து கொன்றுவிட்டு
மகளை கொஞ்சி என்ன பயன் ???

ஒவ்வொரு நாளை என்பதுமே
இன்றிலிருந்தே பிறக்கிறது
இன்றை முழுதாய் கொன்றுவிட்டால்
நாளைய தினமே இருக்காது...

வாழவிரும்புகிறேன் நான் இன்று மட்டும் !!!!!!
               

சௌந்தர்யா

Thursday, 14 August 2014

உச்சகட்ட அழுகை
பேச வரிகள் இல்லை

எச்சில் விழுங்க வழியில்லை
நெஞ்சில் மிச்சம் இங்கு எதுவுமில்லை

பிரிய மனம் இல்லை எனக்கு – இருந்தும்
வீட்டுப்படி தாண்டுகிறேன்

பெரிய கனம் மனதில் இருக்கு – அதனால்
புரியாமல் பேசித்திணருகிறேன்

அடித்திருக்கிறாள் அம்மா
அழுது அமைதி அடைந்ததுண்டு
திட்டி இருக்கிறாள் அம்மா
எரிந்துப்பேசி எதிர்த்ததுண்டு

வாங்கி வாங்கி பழக்கபட்டவள் நான்
வார்த்தைவலிகள் புதிதில்லை
வாசம் இல்லாத மலரும் நான்
எவரும் பரித்துப்போக வழியில்லை



கண்ணீர் தீர்ந்தது கண்களிலே - என்
காயங்கள் தீருமா இதயத்திலே..???

தெரியவில்லை எனக்குமிங்கே
தெரியாதது வாழ்க்கைப்படி ?
புரியவில்லை ஒன்றுமிங்கே
எல்லாம் இங்கு கேள்விக்குறி ???

                     சௌந்தர்யா