இதுவல்லவா வாழக்கை
.
.
.
எங்கிருந்த போதிலுமே
நமை விடாத நினைவு
எது வந்த போதிலுமே
முடியாது சில கனவு
எதிர்பாரா நேரத்தில்
மாறிவிடும் வாழ்வு
மற்றவர் பார்வைக்கு
எல்லாமே ஒரு நிகழ்வு
வலை போட்டு மீன் பிடிப்பவன்
பேரலைக்கு பயந்தால் உணவில்லை
கலைபடைக்க தினம் நினைப்பவன்
ஓரிடத்தில் இருந்தால் பயனில்லை
அன்பிலாத இடத்தில்
அடைக்கலம் கேட்போம்
அறவனைக்க வருவோரை
ஏனோ தள்ளி வைப்போம்
கவலை இல்லா மனிதனில்லை
கவலை கொள்ளாதவன் மனிதனே இல்லை
உலகின் பிரச்சனைகளின் எண்ணிக்கையை
கோவில்களின் அர்ச்சனையே சொல்லிவிடும்
எவரும் தொலைக்காத நிம்மதியை
இன்னும் நாம் தேடுகிறோம்
தேவையென வரும்போதே
சில சொந்தங்களை நாடுகிறோம்
பரபாப்பான வாழ்க்கையில்
வலியை நினைக்ககூட வலியில்லை
இணையதள உலகத்தில் – அருகில்
இணைந்திருக்கும்
உயிரை மதிக்க நேரமில்லை
இருக்கும் போது
வாரா சொந்தம்
இல்லாத போது
வந்து என்ன பயன்
விட்டு போன உறவுகளுக்கு
விலை போட முடியாது
செத்து போன உயிர்களுக்கெல்லாம்
நாம் அழும் சத்தம் கேட்காது..
சோர்வதில் இல்லை வாழ்க்கை
சேர்வதில் உண்டு வாழ்க்கை
தொலைவதில் இல்லை வாழ்க்கை
தேடி அலைவதில் உண்டு வாழ்க்கை
இழந்ததில் இல்லை வாழ்க்கை
மீண்டு எழுவதில் உள்ளதே வாழ்க்கை ..
இன்னிசையை படைத்தான்
காதுகளுக்கு அமுதூட்ட ;
இயற்க்கையை படைத்தான்
கண் இரண்டை குளிர வைக்க ;
நறுமணங்களை படைத்தான்
நாசிகள் நானேர ;
சுவைதன்னை படைத்தான்
உதடுகள் ருசித்துப்போக ;
எண்ணங்களை படைத்தான்
நினைவுகள் வந்துபோக ;
வண்ணங்களை படைத்தான்
அழகு முழுமையடைய ;
வலிகளை படைத்தான்
கண்ணீரை அறிந்துகொள்ள
மகிழ்ச்சியை படைத்தான்
சிரிப்புகள் சிதரிப்போக ;
உறவுகளை படைத்தான்
என்றென்றும் இணைந்து வாழ ;
பிரிவுகளை படைத்தான்
உணர்வுகள் உயிர்த்தெழ ;
பிறப்புகளை படைத்தான்
புது சொந்தங்கள் கண்டெடுக்க ;
இறப்புகளை படைத்தான்
எதுவும் நிலையில்லை என்றுரைக்க !!!
இதில் ஏதும் இல்லை செயற்க்கை
இதுவல்லவா வாழக்கை J J J
---
சௌந்தர்யா ---