காரிருள்
இருந்தென்ன
கண்ணா உன்
கண் ஒளி போதும்
வெயில் இங்கு
எரித்தென்ன
அன்பே உன்
பேச்சினில் பனிமழை பெய்யும்
கேட்காத பாடல்
போல
உன் வருகைக்கு
எதிர்பார்ப்பு
என்றும் இருக்கும்
!
தொட்டு தழுவும்
தென்றல் போல
உன் வாசனை
தினமும்
உன்னுள் என்னை
இழுக்கும்
விலகாத உயிரே
வேண்டாத வரமே
எவரும் படிக்காத
புத்தகமே
ரகசிய பெட்டகமே
வேண்டுதல்கள்
ஏதும் இல்லை
நீ அபிஷேகம்
பார்க்கா கடவுள் எனக்கு
சந்தனம் போல்
வார்த்தை மணக்க
பால் வண்ண
காகிதத்தில்
நீ கவிதை மழையில்
என் மனக்கோவிலில்
என்றும் நின்று நனைந்தால் போதும் …
அமைதி என்பது வரம் என்று
உன் மௌனத்தில்
நான் கண்டுகொண்டேன்
பேச்சொலிகள்
எதற்க்கு அன்பே
நீ கண் சிமிட்டியே
எனை கட்டி போட்டாய்
வா என்று
நீ சொன்னால்
உன் வாழக்கையிலே
வந்தைடைவேன்
போ என்று
நீ சொன்னால்
அங்கேயே நின்று
நான் மடிவேன்
அன்றில் பறவை
போலே
உனை அன்றி
வாழ்வது இயலாது
உயிர் போகும்
நிலை வந்தும்
என் இதயம்
உனை விட்டு அகலாது
நீ எங்கே விட்டு போனாலும்
உனை துரத்தியே
பக்கம் வந்திடுவேன்
வாழ் நாள்
எல்லாம் உன்னருகே
வாழ்ந்தே
மோட்சம் நான் அடைவேன்..
நீரை போல
நெஞ்சினிலே
தேங்கி கிடக்கும்
திருமகனே
நான் வாரிசுகள்
சுமந்தாலும்
நீதான் எனக்கு
தலைமகனே!
உயில் எழுதி
வைத்து விட்டேன்
என் உயிரை
உனக்காக
இனி எது வந்தும்
கவலை இல்லை
என்
உடலும் உறவும் உயிரும் என்றும்
உனக்கே வந்து
சேரும் அழகே !!
No comments:
Post a Comment