நீ இருந்த நெஞ்சத்தில் யாரும் 
உனை நீக்கி இடம் பிடிக்காது போலும்
நீ இல்லை என்றாலே இங்கு 
நான் இல்லை அன்பே
உன் திரு உருவம் போல் என்னை
வேறெதுவும் ஈர்க்கவில்லை கன்னே
உன் ஒற்றை பெயரினிலே
என் வாழ்க்கை அடங்க
அதை போல சுகம் இல்லை
வேறென்ன நான் சொல்ல
தீ போல நான் இருக்க 
ஒளியாக நீ இருக்க
ஒற்றை விளக்கினிலே
நம் மொத்தம் அடங்கிருக்க
தேனான பேச்சுக்கள்
உன்னிடத்தில் மட்டும்
கேட்காமல் வருகிறதே
இது என்ன மாயம்
உலகத்தில் நடக்காத ஓர் செயல் தேடி போனால்
அது நீ திட்டி நான் அழுகும் காலம் தான் அன்பே
சட்டென்ற கோபங்கள் எனக்குன்டு தலைவா
அதை மறைத்து நீ சிரிக்கும் பொழுதே
என் கோபங்கள்
காயங்கள் 
வருத்தங்கள் 
மறந்தே நான் மழை போல பனிபூவாய் சிரிப்பேன்
நீ சொல்லும் எதையும் நான் கேட்டதில்லை
நான் சொல்லி நீ கேட்க உனக்கு குறை ஏதும் இல்லை!
பாதை மாறி போனாலும்
உன் தடத்தில் வந்து சேரட்டும் 
பயணம் முடிந்து போனாலும்
உன் மடி மீதே அது முடியட்டும் !
வார்த்தையிலே பிடித்த ஒன்று 
உன் பெயர் என்றால் அது மிகையாகாது
கிடைத்ததிலே அரிய ஒன்று
உன் உறவென்றால் அது பிழையாகாது
கன்னாலா உன் காதுகளில் 
புது இசை ஒன்று கேட்கிறதா
எனக்கு மட்டும் ஏதோ 
உன் பெயர் சொல்லி பல பாடல் 
வந்து வந்து போகிறது
இதுவரை வாழ்ந்த வாழ்வில்
கணவன் என்பது 
ஒரு வார்த்தையென நினைத்திருந்தேன்
கன்னே
நீ முடிச்சிட்டாய் 
முப்பெரும் தந்தை அன்பை
ஐம்பெரும் தாய் பாசத்தை
பல லெட்சம் சகோதரத்தை
கோடி கோடி நட்புகளை
உன் 
ஒரு உறவில் நான் கண்டேன்
இது
நிச்சயம் 
நான் தவம் செய்யா ஒரு வரம் என்பேன்
! :-*
-        
சௌந்தர்யா முருகப்பன் - 
 
No comments:
Post a Comment