Saturday, 8 November 2014





















பேசாமல் போகின்றாய்
மௌனத்தின் வலி அறிந்தேன்
பாராமல் ஏன் சென்றாய்
பார்க்கும் விழியை வெறுக்கின்றேன்

கிடைக்காதா மறுபடியும்
உன்னோடு உறவிங்கு
கிடைக்காதா மறுபடியும்
உன்போன்ற உறவெங்கு

கோபங்கள் உனக்கென்றால்
சத்தம் போட்டு திட்டிவிடு
கஷ்டங்கள் உனக்கென்றால்
என்னிடமே நீ கொட்டிவிடு

தூரத்தின் சுமை அறிந்தேன்
நீ விலகி செல்லும்போதே
பாரத்தில் நான் கறைந்தேன்
நீ என்னை வெறுக்கும்போதே

தேடிக்கிடைக்கும் சுகம்தன்னை
தேடாமல் தந்தவன் நீ
ஒதுக்கிவைக்கும்  சுமைதன்னை
கேட்காமல் ஏன்தந்தாய் நீ

சொந்தத்தின் அருமைதனை
உன் அருகாமை தந்ததன்று
சொர்க்கத்தின் வாசல்தனை
உன் அறவணைப்பே சொன்னதுண்டு

எத்திசைகள் இருந்தென்ன
உன் திசையை நான் அறியேன்
எத்தனை பேர் இருந்தென்ன
உன் அசைவை நான் மறவேன்

காலங்கள் ஓடினாலும்
வேண்டிடுவேன் உன் அன்பிற்க்கு
காயங்கள் கூடினாலும்
காத்திருப்பேன் உன் மடிக்கு !!

                     ---சௌந்தர்யா---





















அடிகள் இல்லா வலிகள் இது
அவனுக்கான கவிதை இது
.
.
.
எங்கெங்கே தேடுவது
எப்பொழுது நீ வருவாய்
மனம் ஏங்கி அலைகிறது
அதை என்று நீ அறிவாய்

தொலைபேசி அடிக்கையிலே
உன் அழைபென்றே ஓடுகிறேன்
நீ அன்றி போகையிலே
உனை எண்ணித்தவிக்கின்றேன்

கவிதை வார்க்க வேண்டும் - கண்ணா
ஒருமுறை வந்து பார்த்துவிடு
கவலை குறைய வேண்டும் – அன்பே
ஒருமுறை நின்று பேசிவிடு

உறைந்து கிடக்கும் உள்மனதில்
உருகி வழிகிறாய் நீ
உளர்ந்து கிடக்கும் என் மனவானில்
அடிக்கடி உதயமாகிறாய் நீ !!

ஏக்கம் கொண்ட எனதுள்ளம்
ஏற்றம் கொள்ள வழியில்லையா
தாக்கம் கண்ட என்னையிங்கு
தாங்கிபிடிக்க ஆள் இல்லையா


எத்தனை நாள் ஆனாலும்
எங்கே நான் சென்றாலும்
இன்னும் நினைவில்
முத்தமிட்டுத்தான் போகிறது
முறிந்துபோன அந்த முதல் காதல் !!!


---சௌந்தர்யா---



Friday, 7 November 2014




















பளிச்சென முகம்காட்டி புன்னகைப்பாள்
வெளிச்சம் கொடுத்து தனித்திருப்பாள்

வட்ட முகம் அவளுக்கு
வர்ணம் இல்லை அவளுக்கு
வெண்மைதான் என்றென்றும்
பெண்மை இல்லை ஆனாலும்
மென்மை மட்டும் கலையாத – நம்
கண்ணை எல்லாம் திரும்பி பார்க்க செய்யும்
திகட்டாது தித்திக்கும்
திங்கள் நிலவு அவள் !!!


                  சௌந்தர்யா

Wednesday, 5 November 2014

உலகில் அடிமைகள் யாரும் இல்லை
இருந்தும்
எதற்க்கோ அடிமையாகிப்போகாதவரும் இல்லை
அப்படித்தான்
கவிதைக்கு அடிமையாகிப்போனேன் நான் !!!

சிந்தித்திருக்கலாம் சிலர்
எப்படி எழுதுகிறாள் என்று
சிந்தித்திருக்கலாம் சிலர்
எழுதுவதே என் வேலையோ என்று

வேண்டாமென்று ஒதுக்குவதில்லை
வேண்டுமென்றே யோசிப்பதில்லை
தானாய் வந்து விழுகிறது – எழுதாது
போனால் மனம் அழுகிறது

புன்னகையை எழுதிவைத்தேன்
பாராட்டுக்கள் வந்த வண்ணம்
அழுகையை எழுதிவைத்தேன்
ஆறுதல் தந்ததுள்ளம்

வண்ணங்கள் கொடுக்கும் அழகை
வார்த்தையிலே கொடுக்க நினைத்தேன்
வானவில் தரும் நிறத்தை
எழுத்துக்குள் அடக்க நினைத்தேன்

எழுத முற்படும்போதெல்லாம்
தோன்றாத அற்புதக்கவிதை
எதார்த்தமாய் கொட்டிப்போகிறது
என்றாவது ஒரு நாள் !

எழுதுங்கள் கவிதைகளை
மனம் சிரிக்கும் போதெல்லாம்
எழுதுங்கள் கவிதைகளை
மனம் அழுகும் போதெல்லாம்
எழுதுங்கள் கவிதைகளை
உறவு வரும் போதெல்லாம்
எழுதுங்கள் கவிதைகளை
உனை ஒதுக்கும் போதெல்லாம்

சந்தோஷத்தில் தானாய் கிடைக்கும்
சில்லென்ற சிரிப்பின்அலை
அழுகையில் மட்டுமே பிறக்கும்
மிகச்சிறந்த  கவிதைமழை ! ! !

--- சௌந்தர்யா ---