Friday, 10 October 2014

























வெளிச்சம் இல்லா இரவு அது
விண்மீன் மட்டுமே ஒளிர்கிறது
தடுமாறிப்போனவன் அவன்
தடம்மாறிப் போவானா ??

நடுக்காட்டில் நிற்கின்றான்
நல்வழிதேடிப் பார்க்கின்றான்
பாதைகள் மட்டுமே தெரிகிறது
பாதை முடியும் இடம் தெரியவில்லை

தீண்ட வரும் காற்று கூட
தீயாய் அவன்கண்ணில் படுகிறது
தொட்டுபோகும் இலைகள் கூட
தொட்டால் முள்ளாய் துளைக்கிறது

ஆவிகளாய் தெரிகிறது
விழுதுகள் யாவும் இவ்விடத்தில்
ஆண்மாவாய் அலைகிறது
ஆசைகள் கொண்டு ஓரிடத்தில்

கையை பிணைந்து
கால்கள் நடுங்க
உடலே நணைந்து
உள்ளம் அழுக
ஒவ்வொரு நொடிக்கும்
பல்லாயிரம் முறை
இதயம்
துடித்து
அடித்து
துண்டிக்கவிருக்கும் வேலையிலே – ஓர்
வெளிச்சம் விழியின் மூலையிலே

ஒலித்தது அலாரம்
உதித்தது சூரியன்”


-    சௌந்தர்யா -

No comments:

Post a Comment