ஒடுக்கப்படாது போனதனால்
ஒதுக்கப்பட்ட உயிர் ஒன்று
ஓலமிடும் வரிகள் இது
.
.
நினைத்து நினைத்து சொல்லி அழ
உண்மை சொந்தம் ஒன்றும் இல்லாததால்
நனைத்து நனைத்து எழுதி வைத்தேன்
என் காகிதம் திட்டாது என்பதனால்
சோகம் கேட்ட சொந்தங்கள்
ஒன்றை நான்காய் சொல்லிப்போக
எனை பற்றி தெரியாத மாந்தர்கூட
ஏளனமாய் என்னை நினைத்துப்போக..
என்னிடம் மட்டும் நேரில் பசி
எனை தெரிந்து கொள்ளும்
உறவுகள் போதும் எனக்கு !
காதுபட யாரோ பேச்சை
கேட்டு எனை சித்தரிக்கும்
உறவுகள் வாழ்வில் வேண்டாம் எனக்கு !
ஆணவம் கர்வம் ஆத்திரம் எல்லாம்
படைக்கவடுவதில்லை யாருக்கும்
தேவை ஆசை சேவை போல
வருகிறது ஒவ்வொரு சூழலுக்கும்
சர்ச்சை இல்லை இங்கே - இருந்தும்
இந்த இச்சை வாழ்க்கை பிடிக்கவில்லை
சொல்லிகாட்டி சோறூட்டுவதெல்லாம்
எந்த உடம்பிலும் போய் ஒட்டுவதில்லை
நல்ல பெயரே எனக்கில்லை –
அதனால்
நடித்து வாழ அவசியமில்லை
போலியான
வாழ்க்கை வாழ விரும்பவில்லை - அதனால்
பலபல புகழ்பட்டங்கள் எனக்கு
தேவையில்லை
அழுகவில்லை இப்போது
அழுகையை கடந்த வலிகள் இது
சிந்திக்கவில்லை இப்போது
எதார்த்தமாய் வந்த வரிகள் இது
சண்டைக்கு வரவேண்டாம் - சத்தியமாக
யாருக்கும் சமர்பிக்கவில்லை இதை
இது எனக்காக நான் எழுதிய ஒருகவிதை...
---சௌந்தர்யா---
No comments:
Post a Comment