Sunday, 21 June 2015

வலி மட்டும் கண்டதனால் வலிமையானது வாழ்க்கை!
.
.
.
இடம் மாறிய இதயம்
திரும்பி வர மறுக்கிறது
ஏன் இந்த கொடுமை
மனம் தடுமாறி துடிக்கிறது

வலிகளிலே கொடிய வலி
உனை பிரிவேன் எனத் தெரிந்தும்
பிடிக்கிறது இன்னும் இன்னும் L

தொட்டுப் பழக வேண்டாம்
தொடர்ந்து வந்தால் அது போதும்
விட்டு விலக வேண்டாம் உன்
அருகாமை  நிலைத்தால் அது போதும்

நீ என்று சொன்னேன்
ஏதும் இங்கு அர்ப்பமானது
நான் என்ற சொல்லில்
உந்தன் நினைவு கலந்துபோனது

மாண்ட உயிர் வாராது      - இது
மனிதன் வாழ்வின் இறுதிநிலை
நீயன்றி
வாழும்  நாட்கள் நகராது – இது
கண்ணை மறைக்கும் காட்சிப்பிழை

அலை கடல் தாண்டி நீ வாழ - உன்
அறைகன பிரிவும் எனை கொள்ள
விடியற்க்காலை அந்தி மாலை
நேரம் காலம் காதலுக்கில்லை

உன்னோடு வாழ்நாள் தொடர்ந்தால்
நிச்சயம் சிரிப்பின் சித்திரம் நானாவேன்
என்னோடு உன் பயணம் கடந்தால்
உன் மன ஓரம் சென்று பத்திரமாவேன்!

குரல் மட்டும் கேட்டாலே
குறை தீர்ந்து போகிறது – உன்
விழி தொட்ட என் தேகம்
இன்னும் அங்கேயே நிற்கிறது

நான் தெரிந்தே இழக்கும் இந்த நல்வாழ்வு
தெரியாமலே போகட்டும் எவருக்கும் !

இறைவன் வரம் கேட்பதுண்டாம்
கதைகளிலே படித்ததுண்டு
அப்படி அவன் கேட்க வந்தால்
சுதந்திரமான வாழ்வு கேட்பேன்
அதில் உன்னோடு  நான் வாழக் கேட்பேன் !

தடுப்பதற்க்கு ஆள் வேண்டாம்
தனிக்காட்டில் ஓர் இடம் போதும்
தவித்தால் கூட நீர் வேண்டாம்- என்
தாகம் தீர்க்க நீ போதும் !


                                -சௌந்தர்யா-

10 comments:

  1. வலி மட்டும் கண்டதனால் வலிமையானது வாழ்க்கை! . its nice . i will have read all others soon . keep it up . cheers !!

    ReplyDelete
  2. அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. Supe sister,outstanding, ennama kavithi eluthuriga,mams really lucky than,today la iruthu na unga blog aa follow pannuren,then nanum create pannirukan,awesome sister

    ReplyDelete