என்னில் நீ
.
.
.
நீ மட்டும் போதும்
என் ஜீவன் வாழும்
நீ இல்லா நேரம்
மனமெங்கும் பாரம்
உன்னை இங்கு தாங்கியே
உன்னில் என்னை தொலைத்தேனே
என்னை நானும் தேடியே
எதிலும் உனையே அறிந்தேனே
எப்படி என்னுள் நீ வந்தாய்
அறியாத பேதை நான்
உன்னை பற்றி வரலாறே
எழுதச் சொன்னால் மேதை நான்
சத்தம் போட்டு அழுதிடுவேன்
சங்கடம் போக்க நீ வந்தால்
நித்தம் எல்லாம் உறங்கிடுவேன்
சாய்வது உன் தோல் என்றால்
நேரில் உன்னை பார்க்காவிடிலும்
நேரம் உனக்கே அர்ப்பனமே
நீ என்னை தூக்கி எரிந்தாலும்
என் அன்பு உனக்கே சமர்பனமே
கவிதை எழுத ஆசைபட்டேன்
காகிதங்கள் தந்தாய் நீ
இசை தொடுக்க ஆசைபட்டேன்
திசையெங்கும் கருவிகள் அமைத்தாய் நீ
ஓவியம் தீட்ட ஆசைபட்டேன்
வண்ணங்கள் பரிசாய் கொடுத்தாய் நீ
வானவில் கண்டு ஆசைபட்டேன்
வானமே அள்ளிக்கையில் தந்தாய் நீ............
எதை இங்கு கொடுத்தாலும்
ஏக்கமின்றி ஏற்றிடுவேன்
மௌனம் மட்டும் வேண்டாமே
நான்
உறக்கமன்றி போய்விடுவேன்
பேசிவிடு பேசிவிடு
அந்த பேச்சில் இருக்குது பாதி உயிர்
உறவுகொடு உறவுகொடு
உன் உறவில் வாழுது என் மீதி உயிர்
-
சௌந்தர்யா -
No comments:
Post a Comment