Sunday, 3 May 2015

வாழ்வா................. இதில் வாழ வா.............
.
.
.
வாழ்க்கையறியேன் நான்
வாழ்வும் அறியேன் நான்
வானம் அறியேன் நான்
வண்ணம் அறியேன் நான்

ஒரு பிறவிக்குள் பல பிறவி
ஒரு பிறப்புக்குள் பல பிறப்பு
ஒன்றியது ஒன்றுமல்ல
மிச்சமிங்கு அடிகள் மட்டும்....

ஆழத்தெரிந்தவன் அழமாட்டான்
அழுகிறவன் எழமாட்டான்
அன்பென்ற ஒன்றை கூட
ஆணையிட்டால் எவனும் தரமட்டான்

இரவில் வரும் இருட்டு
முடியாவிட்டால் ஏது பகல்
பகலில் வந்த வெளிச்சம்
மறையாதிருந்தால் ஏது இருள்

நேரம் கடக்குது விரைவாக
நாட்கள் நகருது அலை போல
அடிக்கடி சோகம் சூழ்ந்தாலும்
அன்பில் வாழுது நம் ஜீவன்

உலகின் மிகக்கொடிய  நோய்களிலே
வறுமை என்பது முதலிடமே
மனதின் மிகப்பெரிய வலிகளிலே
மௌனம் என்பது மாறாததே

எது வலி தந்தாலும்
எது வந்து போனாலும்
அழுகும் நொடி வருந்தாதே
பத்து முறை அழுவதிலே
ஒரு அனுபவம் அடங்கிப்போகும்!


வரவேற்ப்பது மனித இயல்பு -
எதுவென்றாலும்
வரவேற்க்கிறான் மனிதன்
வலி ஒன்றை தவிர......

வேடிக்கையான இந்த உலகில்
மதச்சண்டை இடும் ஒரு ஜாதி
அதுவே எழுதப்பட்ட ஒரே விதி.........

மரக்கிளை போல
ஒட்டியே ஒரு உறவிருக்குமென்றால்
கண்ணீரும் காயமும் கூட இனி
வரவேற்க்கப்படுகிறது ......

இனிமைகள் பல
இழப்புகள் பல
முடியாது இது  சொல்ல சொல்ல

மாற்றம் மாற்றம் மாற்றமே
இதுதான் மனித வாழ்வா
மாறி மாறி மாறி
நீயும் அதிலே வாழ வா............................

-    சௌந்தர்யா -















No comments:

Post a Comment