புரியும் நொடியில் பிரியும் கனமே
.
.
.
புரியும் நொடியில் பிரியும் கனமே
நீ பிரிந்தால் இங்கு வரமும் வலியே....
சின்ன சின்ன சண்டைகளில் – இதயம்
சின்னா பின்னம் ஆகிப்போக
உன் சிங்கார சிரிப்பில் மட்டும் அது
அழகாய் வந்து தங்கிப்போக
மௌனம் என்பது மரண அடி
அதை மறக்காமல் நீயும் தந்தாயடி
மலர்கள் போன்றது உனது மடி
அதை கொடுக்காமல் ஏன் விலகி சென்றாயடி
அனுபவங்கள் இருந்தாலும்
அனுபவிக்கிறேன் நான் ஏனோ
அறை நொடி நீ பிரிந்தாலும்
பரிதவிக்கிறேன் இது நான்தானோ
பேசி பேசி தீர்க்க வேண்டாம்
பக்கம் வந்து நில் போதும்
பார்த்து கொண்டே இருக்க வேண்டாம்
பாசம் தந்தால் அது போதும்
எங்கே எந்தன் புன்னகை
எங்கே எந்தன் பூரிப்பு
எங்கே எந்தன் வாழ்க்கை
எங்கே எந்தன் இதயம்
எங்கே எந்தன் நிம்மதி
இவையெல்லாம்
உன்னிடத்தில் வாழுது பாரடி
நீ நிலைத்தால் நிற்கும் நில்லடி..
என்ன சுகம் தரவில்லை
என்னை விட்டு செல்கின்றாய்
என்ன தொல்லை நான் தந்தேன்
என்னை விலக்கி வைக்கின்றாய் ..
சஞ்சலங்கள் இருக்காது
சங்கடங்கள் வாராது
உனக்கு
தொல்லைகள் என்னால் தொடராது
பெண்ணே நீயே கொன்றுவிடு
உன்
பாதத்தடியில் மண்ணாயேனும் வாழுகிறேன் ...
-----------
சௌந்தர்யா--------------
No comments:
Post a Comment