Thursday, 30 April 2015












இசை ஒன்றே ஆனாலும்
ரசனைகள் வேறு
உடல் ஒன்றே ஆனாலும்
உயிர்கள் வேறு
வழி ஒன்றே ஆனாலும்
பாதங்கள் வேறு
விழி ஒன்றே ஆனாலும்
பார்வைகள் வேறு

அழகென்று பார்த்தேன் நான்
பார்ப்பதெல்லாம் அழகாக்கினாய் நீ

சின்ன சின்ன புகைபடத்தில்
வண்ணம் பல காட்டிவிட்டாய்.....

அந்தச் செடி கொடிகள் அறிந்திருக்க வாய்ப்பில்லை
இயற்க்கையில் நாமும் இப்படி ஒரு அழகென்று..

அடிக்கடி கடக்கும் யாரும்
அடிக்கடி நடக்கும் யாரும்
நின்று ரசித்திருக்க வாய்ப்பில்லை
என்றபோதும் சற்றே நின்று
ரசிக்க ஒரு வாய்ப்பு தந்தாய்
உன் புகைபடத்தில்.......

இனி ஒரு சிறு நொடி
உன் பார்வையில் பிறர் விழி
ரசித்துப் போகட்டும்..........

-    சௌந்தர்யா -






Monday, 27 April 2015

கண்மனியே
உன் விழிப்பார்வையில் வலியறியேன்
நீ இருந்தாலே இங்கு எனை உணர்வேன்..

நீ கட்டிப்போட்ட கடைபார்வையில்
இன்னும் ஒட்டிகிடக்கின்றேன் நான்

பைங்கிளி  உன் பேச்சை கேட்க
நான் பைத்தியமாய் அலைகின்றேன்
ஒரு சிரு வரி நீ பேசினாலே
நான் உன்னுள் ஐக்கியமாய் ஆகின்றேன்

தங்கத்தாரகை உன் தோளில்
சாய்ந்திருந்தால் சாவும் வரமே
வைரமணி உன் மடியில்
உறக்கம்கொடுத்தால் போதும் வாழ்வே

சுற்றி சுற்றி யோசித்தாலும்
சுற்றும் காற்று தேவையில்லை
அன்பே
உன்னால் வாழும் என் ஜீவன்
உனை அன்றி போனால் உயிர் துறக்கும்...




Sunday, 26 April 2015

புரியும் நொடியில் பிரியும் கனமே
.
.
.
புரியும் நொடியில் பிரியும் கனமே
நீ பிரிந்தால் இங்கு வரமும் வலியே....

சின்ன சின்ன சண்டைகளில் – இதயம்
சின்னா பின்னம் ஆகிப்போக
உன் சிங்கார சிரிப்பில் மட்டும் அது
அழகாய் வந்து தங்கிப்போக

மௌனம் என்பது மரண அடி
அதை மறக்காமல் நீயும் தந்தாயடி
மலர்கள் போன்றது உனது மடி
அதை கொடுக்காமல் ஏன் விலகி சென்றாயடி

அனுபவங்கள் இருந்தாலும்
அனுபவிக்கிறேன் நான் ஏனோ 
அறை நொடி நீ பிரிந்தாலும்
பரிதவிக்கிறேன் இது நான்தானோ

பேசி பேசி தீர்க்க வேண்டாம்
பக்கம் வந்து நில் போதும்
பார்த்து கொண்டே இருக்க வேண்டாம்
பாசம் தந்தால் அது போதும்

எங்கே எந்தன் புன்னகை
எங்கே எந்தன் பூரிப்பு
எங்கே எந்தன் வாழ்க்கை
எங்கே எந்தன் இதயம்
எங்கே எந்தன் நிம்மதி
இவையெல்லாம்
உன்னிடத்தில் வாழுது பாரடி
நீ நிலைத்தால் நிற்கும் நில்லடி..

என்ன சுகம் தரவில்லை
என்னை விட்டு செல்கின்றாய்
என்ன தொல்லை நான் தந்தேன்
என்னை விலக்கி வைக்கின்றாய் ..

சஞ்சலங்கள் இருக்காது
சங்கடங்கள் வாராது
உனக்கு
தொல்லைகள் என்னால் தொடராது
பெண்ணே நீயே கொன்றுவிடு
உன்
பாதத்தடியில் மண்ணாயேனும் வாழுகிறேன் ...


----------- சௌந்தர்யா--------------