கவிதை எனக்கோர் கைகுட்டை
கண்ணீரை என்றும் துடைப்பதனால்
காலம் எனக்கோர் சுமைதாங்கி
காயத்தில் மீட்டு செல்வதனால்
இளமை என்னும் புத்தகத்தில்
காதல் ஒரு பக்கமாகும்
இதயம் என்னும் கல்வெட்டில்
நினைவு ஒரு
அங்கமாகும்
பட்டு பட்டு தெரிந்தாலும்
தெளியவில்லை ஏனோ மனம்
விட்டு எவர் சென்றாலும்
விடுவிக்கவில்லை ஏதோ கனம்
காயப்படும் உள்ளங்களே
தெரிந்து கொள்ளுங்கள் ஒன்றை மட்டும்
உனை நினைக்கா உயிருக்கு
நினைவென்னும் நிலைகள் எதற்க்கு
உனை மதிக்கா மானிடருக்கு
மனதினுள் இடங்கள் எதற்க்கு
காயப்படுத்தும் உள்ளங்களே
புரிந்து கொள்ளுங்கள் ஒன்றை மட்டும்
உபயோகிக்க பொருட்கள் உண்டு
காதலிக்க வேண்டாம் பொருட்களை
காதலிக்க மனிதன் உண்டு
உபயோகிக்க வேண்டாம் மனிதர்களை !
---சௌந்தர்யா---
No comments:
Post a Comment