இடைவெளிகள் பலருக்கு
இடையூராய் இருக்கிறது
இயங்கிவரும் இயந்திர உலகில்
எது நிரந்தரமாய் நிற்கிறது
பிடித்துப்போய் விட்டால்
பிரிய முடியவில்லை
வெறுத்துப்போய் விட்டால்
ஏற்க முடியவில்லை
மழை வெயில்
பருவம் போல
மனம் குணம்
தினம் மாறிப்போக
உனை நினைத்து நான் வாழ
எனை நினைத்து நீ வாழ
பகல் கனவு பல கண்டு
பகட்டிலே
நம் நாள் ஓட
இன்றைய நாளிலே யாரின்
இதயமும் பெரிதில்லை
இனையதள வாழ்விலே - நேரில்
பேசுவோருக்கோ மதிப்பில்லை .. L
---சௌந்தர்யா---
No comments:
Post a Comment