Friday, 30 January 2015

என் தேடலிலே கிடைக்கவில்லை
தேவதையே எங்கு சென்றாய்
என் ஜீவன் இங்கே இளைக்கிறது
ஒரு முறையேனும் வந்து செல்வாய்

நீ இல்லா பொழுதுகலை
நரகமென்றே சொல்லிடுவேன்
நீ வந்த பிறகே தான்
உயிர் மூச்சையும் நான் உணர்வேன்

சொல்ல முடியா மகிழ்ச்சி ஒன்று
உன் வருகையிலே கண்டுவிட்டேன்
இனம் புரியா பிரியம் ஒன்று
உன் தொடர்பினிலே புரிந்துகொண்டேன்

யாவும் இங்கு உன் வசமே
உன்னோடு இருப்பதென்றால்
சாவும் இங்கு ஒரு வரமே
உன் மடியில் இறப்பதென்றால் J



அளவு கடந்து
அன்பு கொள்பவர்கள்
எல்லோரும் ஒருவகையில்
பைத்தியமாம்
அப்படியென்றால்

இந்த உலகில்
யாவரும் ஒரு பைத்தியமே

எவர் மீதேனும் ..

Sunday, 11 January 2015

மயங்கி விழுகையில்
தண்ணீர் தெளிக்கும் கூட்டத்தை
கண்ணீரோடு பார்க்கும் பட்டினிக்கு பிறந்தவன்

சாலை ஓரத்தில்
சில்லரை மட்டும் தேடி
சிந்தனை இழந்து கிடக்கும்
பஞ்சத்தில் தஞ்சம் அடைந்தவன்

எச்சில் கூட மிச்சமில்லாது
கூவிக் கூவி அழைத்து
கூனாய் குருகிப்போய்
கோவில் வாசலே கதியாய் வாழும் பிச்சைக்காரன்

யாருமே யாருக்கும்
தேவையில்லை
பசி மட்டும் இல்லாது போனால் ;

பழமை கலைந்தாலும்
தொழில்நுட்பம் வளர்ந்தாலும்
புதுமை உலகம்
என்று கானுமோ
பஞ்சம் இல்லா தேசத்தை
அதுவரை
பசிப் பினி
என்றும் ஒரு பாவியே !

     ---சௌந்தர்யா---





Wednesday, 7 January 2015

கவிதை எனக்கோர் கைகுட்டை
கண்ணீரை என்றும் துடைப்பதனால்
காலம் எனக்கோர் சுமைதாங்கி
காயத்தில் மீட்டு செல்வதனால்

இளமை என்னும் புத்தகத்தில்
காதல் ஒரு பக்கமாகும்
இதயம் என்னும் கல்வெட்டில்
நினைவு ஒரு அங்கமாகும்                      

பட்டு பட்டு தெரிந்தாலும்
தெளியவில்லை ஏனோ மனம்
விட்டு எவர் சென்றாலும்
விடுவிக்கவில்லை ஏதோ கனம்

காயப்படும் உள்ளங்களே
தெரிந்து கொள்ளுங்கள் ஒன்றை மட்டும்
உனை நினைக்கா உயிருக்கு
நினைவென்னும் நிலைகள் எதற்க்கு
உனை மதிக்கா மானிடருக்கு
மனதினுள் இடங்கள் எதற்க்கு

காயப்படுத்தும் உள்ளங்களே
புரிந்து கொள்ளுங்கள் ஒன்றை மட்டும்
உபயோகிக்க பொருட்கள் உண்டு
காதலிக்க வேண்டாம் பொருட்களை
காதலிக்க மனிதன் உண்டு
உபயோகிக்க வேண்டாம் மனிதர்களை !


                     ---சௌந்தர்யா---




Sunday, 4 January 2015

இடைவெளிகள் பலருக்கு
இடையூராய் இருக்கிறது
இயங்கிவரும் இயந்திர உலகில்
எது நிரந்தரமாய்  நிற்கிறது

பிடித்துப்போய் விட்டால்
பிரிய முடியவில்லை
வெறுத்துப்போய் விட்டால்
ஏற்க முடியவில்லை

மழை வெயில்
பருவம் போல
மனம் குணம்
தினம் மாறிப்போக

உனை நினைத்து நான் வாழ
எனை நினைத்து நீ வாழ
பகல் கனவு பல கண்டு
பகட்டிலே  நம் நாள் ஓட


 இன்றைய நாளிலே யாரின்
இதயமும் பெரிதில்லை
இனையதள வாழ்விலே - நேரில்
பேசுவோருக்கோ மதிப்பில்லை .. L




                     ---சௌந்தர்யா---