மூன்று வருடமாய்
தாங்கிய வலி இது
நீ சொல்லாமல் போனதனால்
எழுதிய கவி இது
மண்ணோடு போனாலும்
என்
மனதோடு இருக்கின்றாய் !
செத்தது அன்று உன் உடல் மட்டுமே
வாழுது இங்கு உன் உயிர் மொத்தமே !
ஆசையுடன் இறந்தவர்கள்
ஆவியாக நம்மை சந்திக்க வருவார்களாம்
என்கிறது வதந்தி
அப்படியானால்
அந்த ஆய்வுகூடத்தில்
முதல் ஆளாய் நான் இருப்பேன்
தங்கையே
மீண்டு வா
மீண்டும் வா
விளையாடலாம் ....
மிகக் கொடிய வலிகளில் ஒன்று
மௌனம்
கொடுத்தது அதை உன்
மயானம்
கண்ணீர் பார்க்காமல் கண்கள் கூட இருக்கலாம்
கண்ணீர் காணாத கல்லரைகள் எங்கும் இருந்திராது
இறந்தவர்களும்
இழந்த நேரம் போலத்தான்
மீட்டு எடுக்க இயலாது
கட்டிப்போட்டது போல் இருக்கின்றேன்
உன் கைகோர்த்து சென்ற இடத்திலெல்லாம்
நொடிப்பொழுதில் போய்விட்டாய்
யுகம் யுகமாய் அழுகின்றேன்
கோடி முறை தினமும் நான் !
வாழ்க்கை என்பது
வாழ்ந்தவர்களை நினைத்து
வாழ்பவர்கள் அழுவதிலே
கழிகிறது சிலநேரம்..
இன்றும் அப்படித்தான்
உன் நினைவுகளில் அழிகின்றேன்
என் வாழ்க்கையில் தான் நீ இல்லை
என் வார்த்தையிலாவது வாழ்ந்துவிடு !
எப்படி எப்படி
எழுதி தீர்த்தாலும்
கண்ணீர் வடித்தாலும்
காலம் கடந்தாலும்
நீ இல்லாத
நிஜம்
தரும் வலி மட்டும்
நிரந்தரமே !
---சௌந்தர்யா---
No comments:
Post a Comment