என்னில் ஒரு அகராதி
.
.
.
வசப்பட்ட வாழ்க்கையின்
வசந்தங்கள் நீயடி
வதைக்கின்ற இதயத்தின்
வைத்தியங்கள் நீயடி
அன்பென்ற மழைதன்னில்
அரியசுகம் நீயடி
அதைபோன்று ஏதுமிங்கு – நான்
விரும்பவில்லை ஏனடி ?
சிக்கிக்கொண்டாய் நீ மட்டும்
என்
வார்த்தையிலும்
வாழ்க்கையிலும்..
இருந்தும்
சிறைவாசம் உனக்கில்லை
எனக்கே அது தொடர்கிறது
தூர எறி
தூக்கி எறி
வறுத்திவிடு
வெறுத்துவிடு
பயமில்லை எனக்கொன்றும்
பயனில்லை அதற்கொன்றும்
உன் துணையில் இல்லாவிடிலும்
உன் நினைவில் வாழ்ந்திடுவேன்
ஏற்க முடியாது
தரவும் முடியாது
வியாதி ஒன்று உன்னை சூழ்ந்திருக்கிறது !
பரவி விடுமோ என
விரட்டுகிறாய் என்னை நீ !
பரவாவிடிலும்
நீ ஒதுக்கிவிட்டால் நான்
மாய்வது நிச்சயம் !!
தாங்கி பிடிக்க ஆள்
இல்லாத போதில்தான்
கஷ்டங்கள் பேரிடறாய்
உருவெடுக்கிறது !
பருவக்காற்று சுகம் என்பதையும்
பங்குனிவெயில் சுடும் என்பதையும்
மறுக்க முடியாது
மாற்ற முடியாது
அதுபோலத்தான் வாழ்க்கையில்
உன் வரவும் பிரிவும்
தடுக்க முடியாது
தவிர்க்கவும் முடியாது !
பிரிந்திருக்க இருவேறு உயிர் அல்ல நீ
என் உயிரின் ஒரு பாதி நீ !!!
---சௌந்தர்யா---