Friday 6 May 2016

இன்றொரு நாள்
.
.
.
எனக்கென்று இருப்பது எதுவும்
இன்று உனக்கென்று ஆன பின்
உனக்கென்ன வேண்டும் அன்பே
நமக்கென்று காதல் போதும்

மௌனப் பாதை உனதானது
வார்த்தை ஜாலம் எனதானது
மாறி மாறி இருவரும் இங்கு
மாற்றம் கண்டு வாழ்வோமே

தீ என நீ எனை சுட்டதில்லை
தேன் சுவை நீ என்றும் எனக்கு திகட்டியதில்லை
பால் மனம் போகா பச்சை பிள்ளை
உன்
உள்ளத்தில் என்றும் கள்ளம் இல்லை

உன்னை போல் யாரும் இங்கு
என்னை அறவனைக்க முடியாது
 உன் உதவும் கரத்தை போல
அந்த கடவுளுக்கும் கிடையாது
நீ மட்டும்
 நீ மட்டும்
அது எனக்கு தெரிந்த ஒரு வேதம்
உனை மட்டும்
உனை மட்டும்
சுத்திடும் என் அன்பு அதிவேகம்     

கடிகாரம் வேண்டாமே
கனப்பொழுதில் எல்லாம் நீ போதும்
பிரிவினைகள் வேண்டாமே
கண் உறங்கும் போதும்  நீ வேண்டும்

 நீ பாதி
நான் பாதி
வாழ்க்கை இருவருக்கும் சரிபாதி

உலகம் சுற்றி பார்க்க உனக்கு ஆசை
என் உலகமாய் எனக்கு உன்னை சுற்றிட ஆசை
அழகாய் இருக்க உனக்கு ஆசை
உன் அன்பை மட்டுமே அழகாய் பார்ப்பது எனது ஆசை

வரம் இல்லை
வரவில்லை
துணை இல்லை
இணை இல்லை
எத்துனை லோகம் சென்றினுமே
இப்படி ஒருவன் கண்டதில்லை
சத்தியம் நான் செய்திடுவேன்
நீ கணவன் அல்ல கடவுள் என….





காரிருள் இருந்தென்ன
கண்ணா உன் கண் ஒளி போதும்
வெயில் இங்கு எரித்தென்ன
அன்பே உன் பேச்சினில் பனிமழை பெய்யும்

கேட்காத பாடல் போல
உன் வருகைக்கு எதிர்பார்ப்பு
என்றும் இருக்கும் !
தொட்டு தழுவும் தென்றல் போல
உன் வாசனை தினமும்
உன்னுள் என்னை இழுக்கும்

விலகாத உயிரே
வேண்டாத வரமே
எவரும் படிக்காத புத்தகமே
ரகசிய பெட்டகமே

வேண்டுதல்கள் ஏதும் இல்லை
நீ அபிஷேகம் பார்க்கா கடவுள் எனக்கு
சந்தனம் போல் வார்த்தை மணக்க
பால் வண்ண காகிதத்தில்
 நீ கவிதை மழையில்
என் மனக்கோவிலில் என்றும் நின்று நனைந்தால் போதும் …

 அமைதி என்பது வரம் என்று
உன் மௌனத்தில் நான் கண்டுகொண்டேன்
பேச்சொலிகள் எதற்க்கு அன்பே
நீ கண் சிமிட்டியே எனை கட்டி போட்டாய்

வா என்று நீ சொன்னால்
உன் வாழக்கையிலே வந்தைடைவேன்
போ என்று நீ சொன்னால்
அங்கேயே நின்று நான் மடிவேன்

அன்றில் பறவை போலே
உனை அன்றி வாழ்வது இயலாது
உயிர் போகும் நிலை வந்தும்
என் இதயம் உனை விட்டு அகலாது

 நீ எங்கே விட்டு போனாலும்
உனை துரத்தியே பக்கம் வந்திடுவேன்
வாழ் நாள் எல்லாம் உன்னருகே
வாழ்ந்தே மோட்சம் நான் அடைவேன்..

நீரை போல நெஞ்சினிலே
தேங்கி கிடக்கும் திருமகனே
நான் வாரிசுகள் சுமந்தாலும்
நீதான் எனக்கு தலைமகனே!
உயில் எழுதி வைத்து விட்டேன்
என் உயிரை உனக்காக
இனி எது வந்தும் கவலை இல்லை
என் உடலும் உறவும் உயிரும் என்றும்
உனக்கே வந்து சேரும் அழகே !!


நீ இருந்த நெஞ்சத்தில் யாரும்
உனை நீக்கி இடம் பிடிக்காது போலும்

நீ இல்லை என்றாலே இங்கு
நான் இல்லை அன்பே
உன் திரு உருவம் போல் என்னை
வேறெதுவும் ஈர்க்கவில்லை கன்னே

உன் ஒற்றை பெயரினிலே
என் வாழ்க்கை அடங்க
அதை போல சுகம் இல்லை
வேறென்ன நான் சொல்ல

தீ போல நான் இருக்க
ஒளியாக நீ இருக்க
ஒற்றை விளக்கினிலே
நம் மொத்தம் அடங்கிருக்க

தேனான பேச்சுக்கள்
உன்னிடத்தில் மட்டும்
கேட்காமல் வருகிறதே
இது என்ன மாயம்


உலகத்தில் நடக்காத ஓர் செயல் தேடி போனால்
அது நீ திட்டி நான் அழுகும் காலம் தான் அன்பே

சட்டென்ற கோபங்கள் எனக்குன்டு தலைவா
அதை மறைத்து நீ சிரிக்கும் பொழுதே
என் கோபங்கள்
காயங்கள்
வருத்தங்கள்
மறந்தே நான் மழை போல பனிபூவாய் சிரிப்பேன்

நீ சொல்லும் எதையும் நான் கேட்டதில்லை
நான் சொல்லி நீ கேட்க உனக்கு குறை ஏதும் இல்லை!

பாதை மாறி போனாலும்
உன் தடத்தில் வந்து சேரட்டும்
பயணம் முடிந்து போனாலும்
உன் மடி மீதே அது முடியட்டும் !

வார்த்தையிலே பிடித்த ஒன்று
உன் பெயர் என்றால் அது மிகையாகாது
கிடைத்ததிலே அரிய ஒன்று
உன் உறவென்றால் அது பிழையாகாது


கன்னாலா உன் காதுகளில்
புது இசை ஒன்று கேட்கிறதா
எனக்கு மட்டும் ஏதோ
உன் பெயர் சொல்லி பல பாடல்
வந்து வந்து போகிறது

இதுவரை வாழ்ந்த வாழ்வில்
கணவன் என்பது
ஒரு வார்த்தையென நினைத்திருந்தேன்
கன்னே
நீ முடிச்சிட்டாய்
முப்பெரும் தந்தை அன்பை
ஐம்பெரும் தாய் பாசத்தை
பல லெட்சம் சகோதரத்தை
கோடி கோடி நட்புகளை
உன்
ஒரு உறவில் நான் கண்டேன்
இது
நிச்சயம்
நான் தவம் செய்யா ஒரு வரம் என்பேன் ! :-*

-         சௌந்தர்யா முருகப்பன் -


இதுவரை  நான் காணா அறிய சுகங்கள்
நீ தந்து நான் காண்பது சுவையிலும் சுவையே !

கடைவிழி பார்வையில்
எங்கோ கொண்டு போனாய்
உன் ஒருவிரல் தீண்டலில்
உயிரை கொன்று போனாய்

எத்துனை நாட்கள் கடந்தாலும்
உன் போல் ஒருவன் கிடைக்காது
என்னென்ன இன்பம் வந்தாலும்
நீ கொடுக்கும் விதம் போல் அமையாது

தாகம் தீர்த்தாய்
பேச்சினிலே
என் சோகம் தீர்த்தாய்
விழிவாள் வீச்சினிலே
புது மோகம் பெருகுது
உன் மூச்சினிலே
இனி  இரு உடலும்
ஒரு உயிரின் ஆட்சியிலே !

பெயரில்
ஆறெழுத்து மந்திரம்  நீ
ஐம்பெரும் காப்பியம் நான்
இணைந்து போன இலக்கியம் நாம்

மொழிகள்   நீ
வரிகள்  நான்
அதில் பினைந்து போன காவியம் நாம்.......
                                                     
கண்டதும் காதல்
காணக் காண காதல்
சொன்னதும் காதல்
சொல்லாத காதல்
உன்னதக் காதல்
உயிரோடொன்றிய காதல்

எழுத எழுத காதலில் தான் எத்துனை
வடிவம் உள்ளதடா
இங்கு காதல் ஒன்று மட்டும்தான்

கவிதையின் முழு உருவமடா ! ! !

Sunday 21 June 2015

வலி மட்டும் கண்டதனால் வலிமையானது வாழ்க்கை!
.
.
.
இடம் மாறிய இதயம்
திரும்பி வர மறுக்கிறது
ஏன் இந்த கொடுமை
மனம் தடுமாறி துடிக்கிறது

வலிகளிலே கொடிய வலி
உனை பிரிவேன் எனத் தெரிந்தும்
பிடிக்கிறது இன்னும் இன்னும் L

தொட்டுப் பழக வேண்டாம்
தொடர்ந்து வந்தால் அது போதும்
விட்டு விலக வேண்டாம் உன்
அருகாமை  நிலைத்தால் அது போதும்

நீ என்று சொன்னேன்
ஏதும் இங்கு அர்ப்பமானது
நான் என்ற சொல்லில்
உந்தன் நினைவு கலந்துபோனது

மாண்ட உயிர் வாராது      - இது
மனிதன் வாழ்வின் இறுதிநிலை
நீயன்றி
வாழும்  நாட்கள் நகராது – இது
கண்ணை மறைக்கும் காட்சிப்பிழை

அலை கடல் தாண்டி நீ வாழ - உன்
அறைகன பிரிவும் எனை கொள்ள
விடியற்க்காலை அந்தி மாலை
நேரம் காலம் காதலுக்கில்லை

உன்னோடு வாழ்நாள் தொடர்ந்தால்
நிச்சயம் சிரிப்பின் சித்திரம் நானாவேன்
என்னோடு உன் பயணம் கடந்தால்
உன் மன ஓரம் சென்று பத்திரமாவேன்!

குரல் மட்டும் கேட்டாலே
குறை தீர்ந்து போகிறது – உன்
விழி தொட்ட என் தேகம்
இன்னும் அங்கேயே நிற்கிறது

நான் தெரிந்தே இழக்கும் இந்த நல்வாழ்வு
தெரியாமலே போகட்டும் எவருக்கும் !

இறைவன் வரம் கேட்பதுண்டாம்
கதைகளிலே படித்ததுண்டு
அப்படி அவன் கேட்க வந்தால்
சுதந்திரமான வாழ்வு கேட்பேன்
அதில் உன்னோடு  நான் வாழக் கேட்பேன் !

தடுப்பதற்க்கு ஆள் வேண்டாம்
தனிக்காட்டில் ஓர் இடம் போதும்
தவித்தால் கூட நீர் வேண்டாம்- என்
தாகம் தீர்க்க நீ போதும் !


                                -சௌந்தர்யா-
இடஞ்சல்களுக்கு இடைவெளி
.
.
.
இத்தருண வெளிப்பாடாய் 
இதை மட்டும் எழுதுகிறேன்
இனம்புரியா இடர்பாடாய்
இன்னல்களுக்கு ஏங்குகிறேன்
வலிக்கும் என தெரிந்தும்
வாலிபக்காதல் விடுவதில்லை
வறுத்தம் பல இருந்தும்
வாழ்க்கை நின்று போவதில்லை
புரியாததை விளக்க முற்படு
விலக முற்படாதே
பிடிக்காததை தவிர்க்க முற்படு
தகர்க்க முற்படாதே
கற்றோரிடம் கற்றிட வேண்டும்
உற்றோருக்கு உதவிட வேண்டும்
பெற்றோரை என்றும் மதித்திட வேண்டும்
மற்றோரையும் சற்றே புரிந்திட வேண்டும்
வரவு செலவு கணக்கை போல
ஏற்றமும் இறக்கமும் தேடி வர
இன்ப துன்ப அலை போல
அடிப்பதும் அனைப்பதும் மாறி வர
எத்திக்கு சென்றாலும்
துரத்தும் காற்று தொட்டே தீரும்
எந்தப்பக்கம் போனாலும்
எதிலும் காயங்கள் என்பது வந்தே போகும் !
வேண்டுவது இங்கே ஏதுமில்லை
வேண்டாம் இங்கே பலவீனம் மட்டும்
வேண்டாமென்பதற்க்கு ஏதுமில்லை
வேண்டும் இங்கே மனபலம் மட்டும் !!!
வாரித்தர அன்பை தவிர
வேறெதுவும் இல்லை என்று
எவரும் இதை உணர்ந்தாலே
வாழ்வில் வருத்தம் என்பதே கிடையாதே!
- சௌந்தர்யா -

Sunday 7 June 2015

சின்ன சின்ன சிரிப்பலைகள்
உன்னால் நிகழ்ந்தால் நிம்மதியே

நீ பேசும் போது கேட்கும் குரலொழி போதும்
ஆகாரம் இங்கு அடுத்ததாகி போகும்

வண்ண மலர் கூட்டங்களும்
வருடும் தென்றல் காற்றுகளும்
பெரிதாய் தெரிய வாய்ப்பில்லை
வாழ்க்கையில் நீ வந்த பின்னே

வறுமை என்பது வட்ட கோடு
தொட்டுத்தான் உலகில் சுற்றவேண்டும்
செல்வம் என்பது கட்சிக்கொடி
விட்டுத்தான் விரைவில் பிடிக்க வேண்டும்

வாராத மழையில் நனைந்தவன் கதையாய்
இல்லாத வலியை இறுக்கிப்பிடிக்கும் உலகமிது

வாழ்வா சாவா என்றிருந்தேன்
வாழ்க்கையாய் வந்து வாழ்வளித்தாய்
உறவா பிரிவா என்றிருந்தேன்
உயிராய் வந்து உடல் கலந்தாய்

உனக்காக நான் வாழ்ந்தேன்
எனக்காக நீ வாழ்ந்தாய்  நமக்காக நாம் வாழ்ந்தோம்
இதில்
பிறர்க்கான தேவை என்ன

கட்டிக்கொண்டு உயிர் வாழ்வோம்
இல்லையேல்
ஒட்டிக்கொண்டே உயிர் பிரிவோம்

முடியாத வானமே
.
.
இந்த சிரிப்பிற்கு அப்பால் நீ தெரிவாய் தேவதையே

விலகாத ஆசையே
.
.
இந்த வலிகளுக்கு அப்பால் நீ கிடைத்தாய் என்னிடமே

பிரியாத தேடலே
.
.
இந்த ஏக்கத்திற்கு அப்பால் நீ சேர்வாய் என் மடியே ...